கையை துண்டு துண்டா… மெரினாவுல தொங்க விடணும் : வாலிபர் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு!!

31 January 2021, 6:56 pm
Kanya Threaten- Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : சீர்காழியில் தாய் மகனை கொன்று கொள்ளையடித்த நபர்களை மெரினா கடற்கரைக்கு அழைத்து சென்று கைகளை துண்டு துண்டாக வெட்டி கம்பில் தொங்கவிட்டு கொல்ல வேண்டும் என வெட்டு கத்தியால் தென்னை மட்டையை வெட்டி செய்முறை விளக்க வீடியோ வாலிபர் வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சீர்காழி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் நகை வியாபாரி வீட்டில் புகுந்த வட மாநில கொள்ளை கும்பலை சேர்ந்த நான்கு பேர் தாய் மகனை கழுத்தறுத்து கொலை செய்ததோடு அங்கிருந்து நகைகளையும் கொள்ளையடித்து சென்ற சம்பவம் தமிழகத்தில் அதிர்வலை உண்டாக்கியது.

இந்த நிலையில் விரைந்து செயல்பட்ட போலீசார் கொள்ளையன் ஒருவரை என் கவுண்டர் செய்ததோடு மேலும் 3-கொள்ளையர்களை கைது செய்து நகைகளை மீட்டனர்.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியை அடுத்த காஞ்சிரவிளை பகுதியை சேர்ந்த நிர்மல் என்ற வாலிபர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பதிவு என்று வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் வெட்டு கத்தி மற்றும் தொன்னை மட்டையுடன் தோன்றிய அவர் சீர்காழி சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை மெரினா பீச்சிற்க்கு அழைத்து சென்று எல்லா மக்களுக்கும் முன்னிலையில் அவர்களது இரண்டு கைகளையும் துண்டு துண்டாக வெட்டி 10 அடியில் கம்பு நாட்டி தொங்க விட்டு கொல்ல வேண்டும் என்றும் இதனால் மற்ற கொள்ளையர்கள் கொள்ளையடிக்க பயப்படுவார்கள் என்று வெட்டு கத்தியை வைத்து அகோரமாக தென்னை மட்டையை வெட்டி காட்டியதோடு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் மனிதாபிமான அடிப்படையில் தண்டனை குறைப்பதால் தமிழ்நாட்டில் திருடர்கள் கூடி கொண்டே இருப்பார்கள் என்றும் தயவு செய்த இந்த முறையை செய்வும் என்றும் தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திங்கள்சந்தை இரணியலை அடுத்த காஞ்சிரவிளை நிர்மலின் பணிவான வேண்டுகோள் என வீடியோ வெளியிட்டார்.

இந்த செயல்முறை விளக்கத்துடன் கூடிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆகி பரபரப்பாகி வரும் நிலையில் ஆயுதங்களுடன் கைகளை வெட்டுவது எப்படி என்று விளக்கத்தோடு வன்மமான வகையில் வீடியோ வெளியிட்ட வாலிபர் நிர்மல் மீது போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Views: - 14

0

0