அரசு பள்ளியை சூறையாடிய இளைஞர்கள் : மதுபோதையில் கதவுகள், சுவர்களை கற்களால் உடைத்து அட்டூழியம்.. ஷாக் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
1 December 2022, 4:20 pm
School Attacked- Updatenews360
Quick Share

விழுப்புரம் அருகே குடிபோதையில் இளைஞர்கள் கருங்கற்களை கொண்டு அரசு பள்ளி கதவு மற்றும் சுவர்களை உடைக்கும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் அருகே உள்ள வீரங்கிபுரம் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது இந்தப் பள்ளியில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

பள்ளி முடிந்தவுடன் அந்தப் பகுதியில் இருக்கும் இளைஞர்கள் இந்தப் பள்ளியில் அமர்ந்து மது குடித்து வருகின்றனர் என்று ஏற்கனவே கிராம மக்கள் புகார் தெரிவித்திருந்த நிலையில், இந்தப் பள்ளியின் கட்டிடத்தை கற்களால் கொண்டு அடித்து உடைக்கப்பட்டு பின்னர் கருங்கல்களைக் கொண்டு வகுப்பறை இரும்பு கதவை உடைக்கும் காட்சி வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

இவர்கள் அந்தப் பகுதியில் தினந்தோறும் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டதோடு தற்போது பள்ளி கட்டிடத்தையும் உடைக்கத் துவங்கி உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது குறித்து கண்டாச்சிபுரம் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Views: - 109

0

0