சிகிச்சையில் இருந்த நண்பனை மகிழ்விக்க மருத்துவமனையில் குத்தாட்டம் போட்ட இளைஞர்கள் : வைரலான வீடியோ சர்ச்சையானது!!

Author: Udayachandran RadhaKrishnan
6 December 2021, 8:53 pm
Kumari Tik Tok - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நண்பனை மகிழ்விக்க வார்டுக்கு சென்ற நண்பர்கள் குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குழித்துறையை சேர்ந்த சர்ஜின் என்பவர் டிக்டாக் பிரபலம், அண்மையில் கூட அவ்வை சண்முகியாக மாறி தமிழக அரசு அறிவித்த மகளிர் இலவச பேருந்து பயணம் செய்த காட்சிகள் வைரலானது.

இந்த நிலையில் சர்ஜினின் நண்பர் ஒருவர் உடல்நலக்குறைவு காரணமாக மார்த்தாண்டம் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சோர்வாக காணப்பட்ட அவரை பார்த்த சர்ஜின், அவரை மகிழ்விக்க சுப்பிரமணியபுரம் படத்தில் வரும் மதுர குலுங்க, குலுங்க பாடலுக்கு தனது சக நண்பனுடன் குத்தாட்டம் போட்டார்.

இதையடுத்து சிகிச்சையில் இருந்த நபர் உற்சாகமானாலும், இவர்களின் இரைச்சலால் மருத்துவமனையில் சக நோயாளிகள் அவதிக்கு ஆளாகினர். இதையடுத்து மருத்துவபணியாளர்களால் சர்ஜின் மற்றும் அவரது நண்பனை அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.

ஆனால் அவர்கள் மருத்துவமனையில் நடனமாடியதை வீடியோவாக எடுத்திருந்ததை உடனே சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. நண்பனை மகிழ்விப்பதாக நினைத்து சக நோயாளிகளை இம்சைப்படுத்திய வீடியோவுக்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Views: - 305

0

0