கோவையில் இருந்து கேரளாவுக்கு காரில் சென்ற இளைஞர்கள் : லாரி மோதி ஒருவர் பரிதாப பலி!!

23 November 2020, 5:00 pm
Kerala Accident - Updatenews360
Quick Share

கோவை : வீட்டில் இருந்தே பணி செய்ய தங்கியிருந்த அறையை காலி செய்து கேரளாவுக்கு காரில் சென்ற லாரி மோதி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் கொச்சினை சேர்ந்தவர் ஸ்டேன்லி மகன் லியோ ஸ்டேன்லி (வயது 27). கோவை ஈச்சனாரி பகுதியில் தங்கி, தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்துவந்தார். இவரது நண்பர் திருவனந்தபுரத்தை சேர்ந்த கோவிந்த் (வயது 27) வடவள்ளி பகுதியில் தங்கி அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் தற்போது இருவரும் வீட்டிலிருந்து பணியாற்றி வந்தனர். இதனால் கோவையில் தங்கியிருந்த அறையை காலி செய்துபொருட்களை எடுத்துச் செல்ல நேற்று கோவிந்தின் காரில் கோவை வந்துள்ளனர்.

Views: - 16

0

0