யூடியூபர் அய்யப்பன் ராமசாமியை தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் : டிடிஎப் வாசன் மீது பாய்ந்த வழக்கு!!

Author: Udayachandran RadhaKrishnan
19 March 2023, 7:48 pm
TTF Ayyappan Ramasamy - Updatenews360
Quick Share

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் டி.டி.எப் வாசன் என்ற வைகுண்ட வாசன் (25). இவர் பிரபல யூடியூபர். இவர் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி சென்று அதனை யூடியூபில் பதிவேற்றம் செய்வார்.

இவருக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த நிலையில், பிரபல தனியார் யூடியூப் செய்தி சேனல் செய்தியாளர் ஒருவரை தரக்குறைவாக பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அந்த நிறுவனம் சார்பில் காரமடை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் டி.டி.எப் வாசன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டி.டி.எப் வாசன் மீது ஏற்கனவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இருசக்கர வாகனத்தை இயக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு அதில் சில வழக்குகளில் நேரில் ஆஜராகி மன்னிப்பு கடிதமும் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 154

0

0