‘எனக்கும் அவங்களுக்கும் ஒத்துவரல’: நிச்சயதார்த்தத்திற்கு பின் திருமணத்தை நிறுத்திய யூடியூபர் இர்பான்…!!

Author: Rajesh
14 February 2022, 6:32 pm
Quick Share

சென்னை: யூடியூப் பிரபலமான உணவு விமர்சகர் இர்பான் நிச்சயதார்த்தத்திற்கு பின் தனது திருமணத்தை நிறுத்தியது பற்றி வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

யூடியூப் பிரபலம் மற்றும் உணவு விமர்சகரான இர்பானை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். உணவு விமர்சகர் இர்பான் அவர்கள் பல்வேறு ஹோட்டல்களுக்கு சென்று உணவுகளை சாப்பிட்டு அதனுடைய டேஸ்ட் குறித்தும், உணவின் தரத்தை குறித்தும் வீடியோவாக சோசியல் மீடியாவில் பதிவு இடுவார்.

சமீபத்தில், இர்பானுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது என்று இவருடைய நண்பர்கள் நிச்சயதார்த்த வீடியோவை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்தார்கள். இது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. இதற்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து இருந்தார்கள். மேலும், இவருடைய நிச்சயதார்த்தம் முடிந்து 4 மாதத்தில் திருமணம் நடக்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது, தான் தனது திருமணத்தை நிறுத்தி விட்டதாக வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில் தன்னுடைய திருமணம் நின்று போய்விட்டது, காரணம் என்னுடைய எண்ணத்திற்கும் அவர்களுடைய எண்ணங்களும் சரியாக பொருந்தவில்லை. நான் எல்லாம் சரியாக பொருந்தனும் என்று ஆசைப்படவில்லை. திருமணம் என்பது ஒரு முறை தான் கடைசி வரைக்கும் நான் அவருடன் பயணிக்க வேண்டும். ஆனால் எனக்கு செட் ஆகவில்லை என்று தெரிந்து நான் நிறுத்திவிட்டேன் என்று கூறியிருக்கிறார்.

அதனால் இனி தன்னுடைய திருமணத்தை பற்றி யாரும் பேச வேண்டாம் அதை விட்டுவிட்டு ஜாலியாக ஏதாவது பேசலாம் என்று பெயர் கூறி இருக்கிறார்.

Views: - 605

0

0