ஜிகா வைரஸ் பரவல் எதிரொலி.! குமரி – கேரள எல்லை சோதனைச் சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

10 July 2021, 6:04 pm
kumari checking- updatenews360
Quick Share

கன்னியாகுமரி :குமரி மாவட்டத்தில் கர்ப்பிணி பெண் உட்பட 15 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், மாவட்ட எல்லை பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

குமரி மாவட்டம் செருவாரக்கோணம் பகுதி கர்ப்பிணி பெண் உட்பட 15 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று ஏற்பட்ட நிலையில், கேரளாவில் இருந்து குமரிக்கு வரும் எல்லைப்பகுதியான நெட்டா சோதனைச்சாவடியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளை இன்று மாவட்ட ஆட்சியர் அரவிந்த் நேரில் சென்று விட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்கள் சற்று மீண்டு வரும் நிலையில், புதிதாக ஜிகா வைரஸ் பரவத்தொடங்கியது குமரி மாவட்ட பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 242

0

0