புதிய மேஜிக் கீபோர்டு கொண்ட ஆப்பிள் ஐபேட் புரோ இந்தியாவில் வெளியானது: விலை, விவரக்குறிப்புகள் மற்றும் பல தகவல்கள்

19 March 2020, 11:12 am
Apple iPad Pro with new Magic Keyboard launched in India: Price, specifications and more
Quick Share

ஆப்பிள் இறுதியாக புதிய செயல்திறன், கேமராக்கள் மற்றும் வடிவமைப்பைக் கொண்டுள்ள புதிய ஐபேட் புரோ மாடலை  அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய ஐபேட் 11 இன்ச் மற்றும் 12.9 இன்ச் அளவுகளில் கிடைக்கிறது. இது சமீபத்திய ஐபேட்OS 13.4 உடன் இயங்குகிறது மற்றும் LiDAR ஸ்கேனருடன் வருகிறது. அதனுடன், நிறுவனம் ஒரு புதிய மேஜிக் கீபோர்டையும் அறிமுகப்படுத்தியுள்ளது, இது ஐபேட் புரோ பயனர்களின் அனுபவத்தை முற்றிலும் வேறு நிலைக்கு எடுத்துச் செல்கிறது.

ஆப்பிளின் உலகளாவிய சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் பில் ஷில்லர் கூறுகையில், “புதிய ஐபேட் புரோ மொபைல் கம்ப்யூட்டிங்கில் கிடைக்காத மேம்பட்ட தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துகிறது” என்று தெரிவித்தார்.

“சக்திவாய்ந்த செயல்திறன், ப்ரோ கேமராக்கள், ப்ரோ ஆடியோ, LiDAR ஸ்கேனர் மற்றும் புதிய மேஜிக் கீபோர்டு ஆகியவை ட்ராக்பேடோடு இணைந்து மேம்பட்ட மொபைல் டிஸ்பிளே ஆகியவற்றுடன், இது ஐபேட் சாதனத்தின் மிகப்பெரிய முன்னேற்றமாகும். புதிய ஐபேட் புரோ போன்று வேறு எந்த சாதனமும் உலகில் இல்லை, எங்கள் வாடிக்கையாளர்கள் இதை  அதிகம் விரும்புவார்கள் என்று நாங்கள் நினைக்கிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

“ஐபேட்OS டிராக்பேட் ஆதரவைக் கொண்டுவருவதன் மூலம் ஐபேட்டை இன்னும் திறமையாகவும் பல்துறை ரீதியாகவும் உருவாக்குகிறோம். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஐபேட் பற்றித் தெரிந்த விஷயங்களையும் மற்றும் விரும்பும் அம்சங்கள் அனைத்தையும் தக்க வைத்துக் கொள்ளும்போது, ​​டிராக்பேட் பயன்பாட்டை டச்-ஃபர்ஸ்ட் சூழலில் ஒருங்கிணைப்பதற்கான சிறந்த வழியாக நாங்கள் முக்கியமாக கருதினோம். இன்று ஐபேட்OS பயன்படுத்தும் மில்லியன் கணக்கான மக்களுக்கு ஐபேட் உடனான இந்த புதிய வழியைக் கொண்டுவருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,” என்று ஆப்பிள் நிறுவனத்தின் மென்பொருள் பொறியியலின் மூத்த துணைத் தலைவர் கிரேக் ஃபெடெர்ஜி கூறினார்.

மேலே குறிப்பிட்டுள்ளபடி, புதிய ஐபேட் புரோ ஒரு அறையில் உள்ள பொருட்களுக்கான தூரத்தை அளவிடும் LiDAR ஸ்கேனருடன் வருகிறது. LiDAR ஸ்கேனரைத் தவிர, நிறுவனம் பின்புறத்தில் ஒரு பரந்த கோணம் மற்றும் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸையும் சேர்த்துள்ளது.

ஆப்பிள் அதிக செயல்திறனுக்காக சமீபத்திய A12Z பயோனிக் சிப்பையும் சேர்த்துள்ளது மற்றும் டிராக்பேடிற்கான ஆதரவையும் சேர்த்துள்ளது.

ஆப்பிள் ஐபேட் புரோ விலை மற்றும் கிடைக்கும் நிலவரம்

  • ஆப்பிள் ஐபேட் புரோ 11 இன்ச் மற்றும் 12.9 இன்ச் என இரண்டு அளவுகளில் கிடைக்கிறது. இது வெள்ளி மற்றும் ஸ்பேஸ் கிரே நிறங்களில் கிடைக்கிறது. சேமிப்பக வகைகளைப் பொறுத்தவரை, ஐபேட் புரோ 128 ஜிபி 256 ஜிபி, 512 ஜிபி மற்றும் 1 டிபி உள்ளிட்ட பல சேமிப்பக உள்ளமைவுகளுடன் கிடைக்கிறது. 11 இன்ச் ஐபேட் புரோ ஆரம்ப விலையாக வைஃபை மாடலுக்கு 71,900 ரூபாய்க்கு கிடைக்கிறது. 
  • வைஃபை + செல்லுலார் மாடல் 85,900 ரூபாய் விலை கொண்டிருக்கும். பெரிய 12.9 இன்ச் பதிப்பின் வைஃபை மாடலுக்கு ஆரம்ப விலை ரூ.89,900 ஆகவும் மற்றும் வைஃபை + செல்லுலார் மாடலின் விலை 1,03,900 ரூபாய் ஆகவும் இருக்கும்.
  • டிராக்பேட் ஆதரவுடன் சமீபத்திய ஐபேட்OS 13.4 மார்ச் 24 அன்று அனைத்து ஐபேட் புரோ மாடல்கள், ஐபேட் ஏர் 2 மற்றும் பிந்தைய மாடல்கள், ஐபேட் 5 வது தலைமுறை மற்றும் பிந்தைய மாடல்கள், மற்றும் ஐபேட் மினி 4 மற்றும் அதன் பிந்தைய மாடல்களில் வெளியாகும். 
  • புதிய டிராக்பேட் ஆதரவுடன், ஐபேட்OS 13.4 உடன் இயங்கும் ஐபேட் ஆப்பிளின் மேஜிக் மவுஸ் 2, மேஜிக் டிராக்பேட் 2 மற்றும் மேஜிக் கீபோர்டு ஆகியவற்றைப் பயன்படுத்த முடியும். பயனர்கள் புளூடூத் அல்லது யூ.எஸ்.பி மூலம் மூன்றாம் தரப்பு மௌஸ்களையும் இணைக்க முடியும்.
  • புதிய மேஜிக் கீபோர்டு ரூ.27,900 விலையிலும் மற்றும் 11 அங்குல ஐபேட் புரோவின் ரூ.12.9 இன்ச் மாடல் 31,900 ரூபாய் விலையிலும் கிடைக்கிறது. 
  • ஆப்பிள் புதிய தலைமுறை ஆப்பிள் பென்சிலையும் புதிய ஐபேட் புரோ மாடல்களையும் ரூ.10,900 விலையில் விற்பனை செய்கிறது. 
  • புதிய மேஜிக் கீபோர்டில் உங்களுக்கு விருப்பமில்லை என்றால், புதிய ஐபேட் புரோ ஸ்பேஸ் நிறத்திலான ஸ்மார்ட் கீபோர்டு 11 அங்குல மற்றும் 12.9 அங்குல மாடல்களை முறையே ரூ.7500 மற்றும் 9,900 ரூபாய் விலைகளில் கிடைக்கும்.

Leave a Reply