இனி JioPhone Next வாங்குவது கஷ்டமே இல்ல… முன்பதிவும் வேண்டாம்!!!

Author: Hemalatha Ramkumar
24 November 2021, 6:47 pm
Quick Share

ஜியோபோன் நெக்ஸ்ட் இப்போது ரிலையன்ஸ் டிஜிட்டலின் இணையதளத்தில் கிடைக்கிறது. முன்னதாக, இந்த நுழைவு நிலை ஃபோனை வாங்க வாடிக்கையாளர்களுக்கு ஒரே ஒரு விருப்பம் மட்டுமே இருந்தது. ஆனால் இனி வாங்குவோர் இந்த சாதனத்திற்கு பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. மேலும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து ஆர்டர் செய்யலாம். ஆன்லைன் ஸ்டோரில் JioPhone Next அதே விலையில் கிடைக்கிறது. ஆனால் தள்ளுபடி விலையில் சாதனத்தைப் பெற வங்கிச் சலுகைகளைப் பெறலாம்.

JioPhone Next:
விலை:-
ஜியோபோன் நெக்ஸ்ட் இந்தியாவில் ரூ.6,499க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை 2GB RAM மற்றும் 32GB சேமிப்பு மாடலுக்கானது. அதிகாரப்பூர்வ ரிலையன்ஸ் டிஜிட்டல் தளத்தின்படி, வாடிக்கையாளர்கள் யெஸ் பேங்க் கிரெடிட் கார்டுகளில் 10 சதவீதம் வரை உடனடி தள்ளுபடியும், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டுகளுக்கு 7.5 சதவீதம் வரை தள்ளுபடியும் பெறலாம்.

EMI கிரெடிட் கார்டு விருப்பங்கள் மாதத்திற்கு ரூ.305.93 இலிருந்து தொடங்குகின்றன. நிறுவனம் ஒரு வருட உற்பத்தியாளர் உத்தரவாதத்தையும் வழங்குகிறது. தொலைபேசியை அனுப்புவதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் தளம் குறிப்பிடுகிறது.

JioPhone Next:
அம்சங்கள்:-
ஜியோபோன் நெக்ஸ்ட் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு மற்றும் HD+ (720 x 1440 பிக்சல்கள்) ரெசொல்யூஷன் கொண்ட சிறிய 5.45-இன்ச் டிஸ்ப்ளே வழங்குகிறது. இது கைரேகை எதிர்ப்பு பூச்சையும் கொண்டுள்ளது. சாதனம் பிரகதி OS இல் இயங்குகிறது. இது இந்திய பயனர்களுக்கான ஆண்ட்ராய்டின் உகந்த பதிப்பாகும்.

இதில் 1.3GHz Qualcomm Snapdragon 215 quad-core செயலி உள்ளது. மைக்ரோ SD கார்டைப் பயன்படுத்தி 512GB வரை உள் சேமிப்பிடத்தை விரிவாக்கும் விருப்பத்தையும் வாடிக்கையாளர்கள் பெறுகிறார்கள்.

கேமரா பொறுத்தவரை, ஒரு 13MP பின்புற கேமரா உள்ளது. முன்பக்கத்தில் செல்ஃபி எடுக்க 8MP கேமரா உள்ளது. போர்ட்ரெய்ட் மோட், நைட் மோட் மற்றும் சில தனிப்பயன் இந்தியா-ஆக்மென்டட் ரியாலிட்டி ஃபில்டர்கள் போன்ற கேமரா அம்சங்களுடன் ஸ்மார்ட்போன் வருகிறது.

JioPhone Next ஆனது 3,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இணைப்பைப் பொறுத்தவரை, சாதனம் 3.5mm ஆடியோ ஜாக், புளூடூத் v4.1, Wi-Fi, மைக்ரோ-USB போர்ட் ஆகியவற்றை ஆதரிக்கிறது மற்றும் இரட்டை சிம் ஸ்லாட்டுகள், நேரலை மொழியாக்கம் மற்றும் Google Assistant ஆதரவு போன்ற அம்சங்களை ஒருவர் காணலாம்.

Views: - 100

0

0

Leave a Reply