எப்போதும் ஆனில் இருக்கும் டிஸ்ப்ளே: ஐபோன் 14 ப்ரோவின் அதிரடி அம்சம்!!!
Author: Hemalatha Ramkumar31 மே 2022, 7:20 மணி
இன்னும் ஒரு வாரத்தில் ஆப்பிளின் உலகளாவிய டெவலப்பர் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் வெளியாக இருக்கும் iOS 16 ஆண்ட்ராய்டில் இருந்து மிகவும் விரும்பப்படும் அம்சங்களில் ஒன்றைக் கொண்டு வரக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அது தான் எப்பொழுதும் ஆனில் இருக்கும் டிஸ்ப்ளே.
எப்போதும் ஆன் டிஸ்ப்ளேவை ஆப்பிள் போனில் ஆண்ட்ராய்டில் இருப்பதைப் போலவே இருக்கும். இந்த அம்சம் வரவிருக்கும் iPhone 14 Pro மாடல்களில் மட்டுமே கிடைக்கும்.
இந்த அம்சம் இதற்கு முன்பாக ஐபோன் 13 இல் இருக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டது. இருப்பினும், அது நடைபெறாமல் போனது.
iOS 16 யில் உள்ள பேட்டரியின் செயல்திறன் என்ன?
iOS 16 யில் ஆப்பிள் மேம்படுத்தப்பட்ட பேட்டரி தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளது. மேலும் அதிக புதுப்பிப்பு விகித பேனல் மற்றும் அதன் எப்போதும் ஆனில் இருக்கும் நிலை ஆகியவற்றை ஏற்கும் வகையில் பேட்டரி இருக்கலாம்.
0
0