பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் ரியல்மி டெக்லைஃப் வாஷிங் மெஷின்…முழு விவரம் உள்ளே!!!

Author: Hemalatha Ramkumar
30 September 2021, 3:43 pm
Quick Share

நடுத்தர அளவிலான ஸ்மார்ட்போனுடன் தனது பயணத்தைத் தொடங்கிய பிராண்ட் ரியல்மி. இப்போது அதன் ப்ராடக்ட்களை விரிவுபடுத்தி வருகிறது. ஸ்மார்ட் டிவி முதல் தாடி டிரிம்மர் முதல் வேக்கம் கிளீனர் வரை, இந்த பிராண்ட் கடந்த சில மாதங்களாக நிறைய புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

நிறுவனம் இப்போது ரியல்மி டெக்லைஃப் வாஷிங் மெஷின்ஸ் என்ற பெயரில் தனது முதல் ஸ்மார்ட் வாஷிங் மெஷின்களை அறிவித்துள்ளது. ஆரம்ப விலையில் ரூ. 12,990 க்கு கிடைக்கிறது. இந்த சாதனங்கள் பட்ஜெட் வாஷிங் டாப்-லோடிங் மெஷின்களுக்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரியல்மி டெக்லைஃப் வாஷிங் மெஷின் அம்சங்கள்:-
ரியல்மே டெக்லைஃப் வாஷிங் மெஷின் நீர் எதிர்ப்பிற்கான IPX 4 சான்றிதழுடன் வருகிறது. 150W மோட்டார் மூலம் இயக்கப்படும். இந்த சலவை இயந்திரம் ஒரே நேரத்தில் 7.5KG வரை சலவையை கையாள முடியும். இது ஒரு சிறந்த துணி துவைக்கும் அனுபவத்தை வழங்கும் டைடல் அலை டிரமினை பயன்படுத்துகிறது.

கூடுதலாக, வாஷிங் மெஷினில் பல ஸ்மார்ட் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவை பவர் ஃபோம் வாஷ் மற்றும் துணி-பாதுகாப்பான வாஷ் ஆகியவற்றை வழங்குவதாகக் கூறப்படுகிறது. அதற்கு மேல், இது ஒரு சிறிய வடிவமைப்பைக் கொண்டுள்ளது மற்றும் முற்றிலும் தானியங்கி துணி துவைக்கும் அனுபவத்தை வழங்குகிறது.

நீங்கள் சற்று நவீன மற்றும் ஸ்மார்ட் வாஷிங் மெஷினைத் தேடுகிறீர்களானால், ரியல்மி உங்களை நிச்சயமாக கவரும். ரியல்மீ டெக்லைஃப் வாஷிங் மெஷினில் 8 லிட்டர் கொள்ளளவு கொண்ட மாடலும் உள்ளது. இதில் உள்ளமைக்கப்பட்ட வாட்டர் ஹீட்டர் மற்றும் கார்மெண்ட் ஸ்டெபிலைசேஷன் போன்ற கூடுதல் அம்சங்கள் உள்ளன.

இரண்டு மாடல்களும் கூடுதல் அம்சங்களை வழங்குகின்றன. இது 10 முறைகள் வரை 700rpm சுழல் வேகத்துடன் 5 ஸ்டார் ரேட்டிங்கை கொண்டுள்ளது. கூடுதலாக, இந்த சலவை இயந்திரங்கள் இரண்டு வருட விரிவான உத்தரவாதத்துடன் மோட்டருக்கு ஐந்து வருட உத்தரவாதத்துடன் வருகிறது.

விலை மற்றும் கிடைக்கும் தன்மை:
ரியல்மி டெக்லைஃப் வாஷிங் மெஷினின் இரண்டு வகைகளும் பிளிப்கார்ட்டில் பிரத்தியேகமாக அடிப்படை மாடலுக்கு ரூ. 12,990 ஆகும். இரண்டு மாடல்களும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, சைல்ட் லாக் தொழில்நுட்பம் போன்ற பாதுகாப்பு அம்சங்களை வழங்குகின்றன என்பதையும் இந்த பட்டியல் உறுதி செய்கிறது.

Views: - 215

0

0