நெக்ஸ்ட் ஜென் கன்சோலான ப்ளே ஸ்டேஷன் 5 குறிப்புகளை வெளியிட்டது சோனி நிறுவனம்!!!

19 March 2020, 8:05 pm
Quick Share

அனைவரும் எதிர்பார்த்து வரும் நெக்ஸ்ட் ஜென் கன்சோலான ப்ளே ஸ்டேஷன் 5 இன் குறிப்புகளை சோனி நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. சோனி நிறுவனத்தின் முன்னனி சிஸ்டம் ஆர்கிடெக்டான மார்க் செர்னி கேம் டிவலப்பர்ஸ் கான்ஃபெரன்ஸ் 2020 ல் வரவிருக்கும் கன்சோல் குறித்த புதிய பல தகவல்களை கூறினார்.

இந்த புதிய கன்சோல் 3D ஆடியோவை சப்போர்ட் செய்யும் என்பதை சோனி நிறுவனம் தனது பதிவில் கூறியுள்ளது. மேலும் கிட்டத்தட்ட 100 PS4 கேம்கள் அதில் சேர்க்கப்படும் எனவும் இதற்காக 4000 த்திற்கும் மேற்பட்ட PS4 கேம்கள் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாகவும் அதில் தெரிவித்துள்ளனர்.

புதிய கன்சோல் பற்றிய குறிப்புகள் மட்டுமே அதில் கூறப்பட்டுள்ளது. அதன் வடிவமைப்பு பற்றிய எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. வன்பொருள் பற்றி பேசுகையில் குறைவான லோடு டைம் கொண்ட SSD ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட முறையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. 

மேலும் சோனி நிறுவனம் கூறுகையில் GPU வை PS4 ல் இருந்து PS5 ஆக மாற்றுவதால்  அதிகமான ஸ்கிரீன் ரெசல்யூஷன், ரே ட்ரேசிங், ரியலிஸ்டிக் ஷேடோ மற்றும் லைட் எஃபெக்ட்டுகள் கிடைக்கும். இந்த புதிய GPU ப்ளே ஸ்டேஷன் 5 ல் 4K கேமிங் மற்றும் ஒரு சில கேம்களின் ரெசல்யூஷனை 8K வரையிலும் சப்போர்ட் செய்யும்.

TECH01-Updatenews360 (1)

இது மட்டும் இல்லாமல் PS5 3D ஆடியோ மூலம் ஆடியோவின் தரத்தை உயர்த்துவதோடு உண்மையான சத்தங்கள் போன்ற உணர்வை தரும் என கூறுகிறது. இது எல்லா பயனாளர்களுக்கும் உதவியாக இருக்கும் என கூறுகின்றனர்.

இது பற்றி சோனி கூறுகையில்,”PS5 ல் உள்ள 3D ஆடியோ ஆழ்ந்த சத்தங்களை உங்களுக்கு கொடுக்கும். ஒரு கேமிற்கு வீடியோ எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு ஆடியோவும் முக்கியம். ஸ்பீக்கர் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் ஆடியோ நன்றாக இருந்தால் போதாது. கேமை விளையாடும் போது கேட்கப்படும் ஆடியோ நீங்கள் உண்மையிலேயே அந்த இடத்தில் இருப்பதை போன்ற உணர்வை உங்களுக்கு தரும். மழைத்துளி விழும் சத்தம் மற்றும் உங்களை பின் தொடர்ந்து வரும் எதிரியின் சத்தம் உள்ளிட்டவையை தெள்ளத்தெளிவாக கேட்க முடியும்.”

இதைத் தவிர ப்ளே ஸ்டேஷன் 5 ல் x86-64-AMD Ryzen Zen 2 CPU கொடுக்கப்பட்டு உள்ளது. அதன் வேகம் 3.5 GHz வரை இருக்கும். மேலும் 16 GB RAM உடன் வருகிறது. SSD ஆன்போர்டின் ஸ்டோரேஜ் 825GB யாக உள்ளது. Radeon RDNA 2 கிராஃபிக்ஸ் இன்ஜின் பொருத்தப்பட்டு அதன் வேகம் 2.23 GHz ஆகவும் பேண்டுவித் 10.3 Tera FLOPS ஆகவும் உள்ளது.