அமேசான் கிரேட் இந்தியன் திருவிழாவில் 10,000 வரை அதிரடி விலைகுறைப்பை பெறும் ஒன்பிளஸ்!!!

Author: Hemalatha Ramkumar
3 October 2021, 4:24 pm
Quick Share

அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் மாறி மாறி தங்களின் ஆஃபர்கள் மூலமாக மக்களை குஷியேத்திக் கொண்டிருக்கின்றன. அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் ஆகிய இரண்டிலும் இன்றிலிருந்து ஆஃபர் சேல் தொடங்கி விட்டது. எதை வாங்குவது, எதை விடுவது என்று தெரியாமல் மக்கள் குழம்பி போய் இருக்கிறார்கள் என்று தான் கூற வேண்டும்.

அந்த வகையில் “கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்” யை முன்னிட்டு அமேசான் நிறுவனம் பல சலுகைகளை வழங்கி வருகிறது. இதில் செம ஹைலைட்டாக ஒன்பிளஸ் மொபைல்கள் மீது அதிரடியான விலை குறைப்பை அமேசான் அறிவித்துள்ளது. இந்த ஆஃபர்கள் ஒன்பிளஸ் 9 5G, ஒன்பிளஸ் 9 ப்ரோ 5G மற்றும் ஒன்பிளஸ் 9R 5G ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்படுகின்றன.

அதிலும் குறிப்பாக ஒன்பிளஸின் புதிய நோர்ட் போன்களான ஒன்பிளஸ் நோர்ட் 2 5G மற்றும் நோர்ட் CE ஆகிய ஸ்மார்ட்போன்களை நீங்கள் ICICI வங்கியின் கார்டுகளை பயன்படுத்தி வாங்கும்போது சிறப்பு சலுகையாக 10% தள்ளுபடி கிடைக்கும். இது குறித்த தகவல்களை இப்போது பார்ப்போம்.

ஒன்பிளஸ் 9 ப்ரோ:
இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை 57,999 ஆகும். க்ஷமிஸ்ட், பைன் கிரீன் மற்றும் ஸ்டெல்லர் பிளாக் ஆகிய மூன்று நிறங்களில் கிடைக்கும் ஒன்பிளஸ் 9 ப்ரோ 8 GB RAM + 128 GB ஸ்டோரேஜூடன் கிடைக்கிறது. இது ஆஃபர் விலையில் 34,999 ரூபாய்க்கு கிடைக்கும்.

ஒன்பிளஸ் நோர்ட் :
ஒன்பிளஸ் நோர்ட் 2 5G மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் CE 5G ஆகிய மாடல் போன்களுக்கு விலை குறைப்பு கிடையாது. இருப்பினும் வங்கி EMI முறைகளில் வாங்கும்போதும், ஆகிசிஸ் மற்றும் ICICI வங்கிகளின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக் சலுகைகள் கிடைக்கும். மேலும் இவற்றிற்கு எகஸ்செயின்ஞ் ஆஃபர்களும் உள்ளன.

ஒன்பிளஸ் பட்ஸ் :
ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ TWS ரூ .9,999க்கு விலை குறைப்பு கிடைக்கிறது. அமேசான் கிரேட் இந்தியன் திருவிழாவை முன்னிட்டு ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் Z சீரிஸ் ரூ .1,999க்கும், ஒன்பிளஸ் பட்ஸ் Z (MRP ரூ. 2,999), பவர் பேங்க் 10,000 mAh 1,299க்கும் தள்ளுபடி விலையில் வாங்கி கொள்ளலாம் என்று அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.

Views: - 251

0

0