வச்சான் பாரு ஆப்பு.. மொபைல், டிவி என அனைத்திலும் புகும் பிஎஸ்என்எல்.. D2D என்றால் என்ன?

Author: Hariharasudhan
8 November 2024, 3:22 pm

சிம் கார்டுகள் இல்லாமல், நெட்வொர்க் இல்லாத இடங்களில் இருந்தும் ஆடியோ மற்றும் வீடியோ கால்களை மேற்கொள்ளும் Direct to Device என்னவென்பதை தெரிந்து கொள்ளலாம்.

டெல்லி: நாட்டில் மத்திய தொலைத் தொடர்பு துறையின் கீழான பாரத் சஞ்சார் நிகம் லிமிட் எனப்படும் பிஎஸ்என்எல், தொலைபேசி, அலைபேசி, இணையம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இருப்பினும், 4ஜி சேவை கிடைக்காமல் நாட்டின் பல பகுதிகள் இருக்கின்றன. ஆனால், 5ஜி சேவையிலும் பிஎஸ்என்எல் களம் இறங்கி உள்ளது.

இந்த நிலையில், மீண்டும் ஒரு புதுமையாக சிம் கார்டுகள் இல்லால், நெட்வொர்க் இல்லாத இடங்களில் இருந்தும் ஆடியோ மற்றும் வீடியோ சேவைகளை மேற்கொள்ளும் வகையில் Direct to Device என்ற புதிய சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தி உள்ளது.

Direct to Device என்றால் என்ன? சிம் கார்டு இன்றி ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை வாடிக்கையாளர்கள் மேற்கொள்ள முடியும். அதேநேரம், நெட்வொர்க் இல்லாத இடங்களிலும் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் தடையின்றி பேச முடியும். இதன்படி, D2D என்பது ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட்வாட்ச்கள் மற்றும் கார்களை நேரடியாக செயற்கைக்கோள் நெட்வொர்க் உடன் இணைக்க அனுமதிக்கும் ஒரு புதிய தொழில்நுட்பமாக மாறும்.

Jio

மேலும், இணைய சேவை இல்லாமலேயே பைபர்-டு-தி-ஹோம் – எப்டிடிஎச் (Fiber to the Home – FTTH) சேவை மூலம் லைவ் டிவி சேனல்களை பிஎஸ்என்எல் வழங்க இருக்கிறது. தமிழ்நாடு மற்றும் மத்தியப் பிரதேசத்தில் இந்த சேவைகள் முதலாவதாக கிடைக்க இருக்கிறது என்பது நமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. இந்த பைபர் மூலம் இணைய சேவை முடிந்துவிட்டாலும், தொடர்ந்து லைவ் டிவி சேனல்களின் சேவை கிடைக்கும் என்றும், இதன் மூலம் ஜியோ பிளஸ் லைவ் சேனல் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

இதையும் படிங்க: தனுஷை மீண்டும் இழுத்த சிவகார்த்திகேயன்.. திடீரென மாறிய முகம்!

ஏனென்றால், மற்ற அனைத்து லைவ் சேனல்களுக்கும் இண்டர்நெட் சேவை மிக முக்கியம். ஆனால், BSNL- இன் இந்த சேவையால் இணைய வசதி இன்றியும் லைவ் டிவி சேனல்களை பார்க்க முடியும். இவை முதலாவதாக, ஏற்கனவே பிஎஸ்என்எல் பைபர் சேவை கொண்டவர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

  • Sathyaraj Daughter Divya Sathyaraj என் வாழ்க்கையில் மிகப்பெரிய சோதனையான காலம் இது.. பிரபல நடிகரின் மகள் வேதனை!
  • Views: - 287

    0

    0