லேண்டரை தொடர்பு கொள்ள தொடர்ந்து 14 நாட்கள் முயற்சி: இஸ்ரோ சிவன் அறிவிப்பு

8 September 2019, 6:17 am
lander
Quick Share

நிலவில் தரையிறங்குவதற்கு வெகு சில நிமிடங்களுக்கு முன்னதாக தொடர்பிலிருந்து விலகிய சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள தொடர்ந்து 14 நாட்களுக்கு முயற்சிக்கப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

நிலவில் தரையிறங்குவதற்கு வெகு சில நிமிடங்களுக்கு முன்னதாக தொடர்பிலிருந்து விலகிய சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள தொடர்ந்து 14 நாட்களுக்கு முயற்சிக்கப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

நிலவின் தரை பரப்புக்கு மேல் 2.1 கி.மீ உயரத்தில் இறங்கிக் கொண்டிருந்த விக்ரம் லேண்டருக்கும் தரைக் கட்டுப்பாட்டு அறைக்குமான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. உலகளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த அறிவியல் நிகழ்வு திட்டமிட்டபடி நிறைவேறாதது பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.

இந்நிலையில், லேண்டரை தொடர்பு கொள்ள தொடர்ந்து 14 நாட்களுக்கு முயற்சிக்கப்படும் என்ற இஸ்ரோ சிவனின் இந்த அறிவிப்பு நம்பிக்கையை விதைக்கும் வண்ணம் உள்ளது.

மேலும் தனது பேட்டியில், “சந்திரயான் 2 ஆர்பிட்டர் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நிலவில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் சுற்றி வந்து கொண்டு இருக்கிறது. இந்த ஆர்பிட்டர் ஆரம்பத்தில் ஓராண்டு பயன்பாட்டிற்காகவே உருவாக்கப்பட்டது. ஆனால் அதில் எரிபொருள் அதிகமாக இருக்கிறது. இதனால், சுமார் ஏழரையாண்டுகள் வரை செயல்படும். அதிலுள்ள நவீன கேமரா நிலவு முழுவதையும் தெளிவாக படம்பிடிக்கவல்லது” என்று சிவன் கூறியுள்ளார்.

பிரதமர் அளித்த ஊக்கத்தால் தொடர்ந்து இஸ்ரோ தனது அறிவியல் ஆராய்ச்சிகளை உற்சாகத்துடன் மேற்கொள்ளும் என்றும் சிவன் கூறியுள்ளார்.