2025 க்குள் 10 புதிய மின்சார வாகனங்கள் | தீவிரமான மின்மயமாக்கல் திட்டத்துடன் டாடா மோட்டார்ஸ்

3 July 2021, 11:56 am
10 New Tata Electric Vehicles To Be Launched By 2025: Aggressive Electrification Plan Revealed
Quick Share

இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2025 க்குள் மேலும் 10 மின்சார வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. வாகனத் தொழில்துறையில் பல வாகன நிறுவனங்கள் விரைந்து மின்மயமாக்கலை நோக்கி நகரும் இந்த வேளையில் மேலும் ஊக்கமளிக்கும் விதமாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 76 வது வருடாந்திர அறிக்கையின் போது மேலும் பல மின்சார வாகனங்களை டாடா அறிமுகப்படுத்தும் என்று இந்த நிறுவனத்தின் தலைவர் என் சந்திரசேகரன் தெரிவித்தார்.

இந்த பிரிவில் டாடா மோட்டார்ஸ் ஏற்கனவே அனுபவம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது, ஏனெனில் நிறுவனம் ஏற்கனவே நெக்ஸன் EV மற்றும் டைகோர் EV போன்றவற்றை அறிமுகம் செய்துள்ளது. துணை-4 மீட்டர் டாடா நெக்ஸன் EV தற்போது நாட்டின் அதிக விற்பனையான மின்சார வாகனங்களில் ஒன்றாக இருக்கிறது.

இதனுடன், டாடா மோட்டார்ஸ் நாடு முழுவதும் சார்ஜிங் உள்கட்டமைப்பை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது, ஏனெனில் மின்சார வாகனங்கள்  வாங்குபவர்களின் மிகப்பெரிய கவலைகளில் ஒன்றாக இது இருக்கிறது. அது மட்டுமில்லாமல் நிறுவனம் தனது மின்சார வாகனங்களுக்கு அதிக பேட்டரி பேக்குகளை பயன்படுத்தவும் பார்க்கிறது.

மின்சார வாகனங்கள் சுற்றுசூழலுக்கு நன்மைத் தரக்கூடியது என்பது ஒரு புறம் இருந்தாலும் இதன் இயக்க செலவு மிகவும் குறைவாகவே இருக்கும். நகரத்தில் உள்ள பயணிகளுக்கு பணத்தை மிச்சப்படுத்த மின்சார வாகனங்கள் மிகவும் உதவியாக இருக்கும்.

டாடா மோட்டார்ஸ் 2021 நிதியாண்டில் கிட்டத்தட்ட 4,000 யூனிட் நெக்ஸன் மின்சார கார்களை விற்பனை செய்துள்ளது. 2025 க்குள் மேலும் 10 மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில், டாடா மோட்டார்ஸ் அதிநவீன தன்னாட்சி மற்றும் இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தை அமைப்பதிலும் கவனம் செலுத்துகிறது.

டாடா மோட்டார்ஸுக்குச் சொந்தமான JLR நிறுவனம் 2036 க்குள் முழுமையாக மின்சார வாகனங்களை மட்டுமே உற்பத்திச் செய்ய உறுதி பூண்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் கிட்டத்தட்ட 125 நாடுகளில் தடம்பதித்து உலகளவில் 650 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளதை அடுத்து மின்சார வாகன பிரிவில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக மாற பல சீரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

Views: - 173

0

0