வெறும் 8 நிமிடங்களில் 100% சார்ஜ் | புதிய உலக சாதனைப் படைத்த சியோமி

31 May 2021, 8:44 pm
100% battery in just 8 minutes Xiaomi showcases 200W ‘HyperCharge’ tech
Quick Share

சியோமி தனது சமீபத்திய வேகமாக சார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது. நிறுவனம் தனது புதிய தொழில்நுட்பம் 200W வயர்டு “ஹைப்பர்சார்ஜ்” ஐப் பயன்படுத்தி வெறும் 8 நிமிடங்களில் 4,000 mAh பேட்டரியுடனான Mi 11 ப்ரோ ஸ்மார்ட்போனை முழுமையாக சார்ஜ் செய்ததாகக் கூறுகிறது. 120W வயர்லெஸ் சார்ஜிங் மூலம் 15 நிமிடங்களில் தொலைபேசியை முழுமையாக சார்ஜ் செய்ய முடிந்தது என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. வயர்டு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஆகிய இரண்டிலும் இந்த புதிய தொழில்நுட்பம் புதிய உலக சாதனை படைத்துள்ளது என்று சியோமி கூறுகிறது.

சீன கைபேசி நிறுவனங்கள் போட்டியிடும் பல முக்கியமான விஷயங்களில் சார்ஜிங் வேகம் மற்றும் சார்ஜிங் திறனும் முக்கியமானது. இந்த விஷயத்தில் சியோமி மீண்டும் தான் ஒரு சிறந்த நிறுவனம் என்பதை நிரூபணம் செய்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு, நிறுவனம் 100W சார்ஜிங் தொழில்நுட்பத்தை காட்சிப்படுத்தியது, இது வெறும் 17 நிமிடங்களில் 4,000 mAh பேட்டரியை சார்ஜ் செய்யகூடியது. 120W சார்ஜிங் தொழில்நுட்பம், கடந்த ஆண்டு காட்சிப்படுத்தப்பட்டது, அந்த நுட்பம் 23 நிமிடங்களில் ஒரு பெரிய 4,500 mAh பேட்டரி கொண்ட  Mi 10 அல்ட்ராவை சார்ஜ் செய்தது.

சியோமியைத் தவிர, ஓப்போ போன்ற பிராண்டுகளும் வேகமாக சார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்தில் சிறந்து  விளங்குவதாக நிரூபித்துள்ளன. கடந்த ஆண்டு, நிறுவனம் 125W சார்ஜிங் தொழில்நுட்பத்தை காட்சிப்படுத்தியது, இது 4,000 mAh பேட்டரியை வெறும் 5 நிமிடங்களில் 41% வரை சார்ஜ் செய்து காட்டியது குறிப்பிடத்தக்கது.

சியோமியைப் போலன்றி, ஒப்போ அதன் சார்ஜிங் தொழில்நுட்பம் எவ்வாறு இயங்குகிறது என்பதற்கான ஒரு கண்ணோட்டத்தை அளித்தது. மேம்படுத்தப்பட்ட சூப்பர் VOOC கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்ட தொழில்நுட்பம் பற்றி நிறுவனம் தெரிவித்தது. 

ஆனால் சியோமி சமீபத்திய சார்ஜிங் தொழில்நுட்பம் குறித்த விளக்கம் எதுவும் வழங்கவில்லை.

Views: - 146

0

0