3 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 1,000 LNG நிலையங்கள் நிறுவ திட்டம் | அனைத்து விவரங்களும் இங்கே

21 November 2020, 9:44 pm
1,000 LNG Stations To Be Installed Across India In 3 Years
Quick Share

இந்திய அரசு LNG எரிபொருளை நாடு முழுவதும் டீசல் மூலம் இயங்கும் டிரக் மற்றும் பேருந்துகளுக்கு ஏற்ற மாற்றாக கொண்டு வருகிறது. இதன் விளைவாக, இந்தியாவில் எளிதில் கிடைக்க, குறிப்பாக வணிக பயன்பாட்டிற்காக, இந்தியாவில் சுமார் 1,000 LNG நிலையங்களை அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

LNG நிலையங்களை அமைக்க அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ.10,000 கோடி முதலீடு செய்ய இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. அரசாங்கத்தின் தகவலின்படி, LNG எரிபொருள் இயக்க செலவுகளை குறைப்பதன் மூலம் நீண்ட தூர போக்குவரத்தில் புரட்சியை ஏற்படுத்துவதை அரசு நோக்கமாக கொண்டுள்ளது, இது டீசல் எரிபொருளை விட 30-40 சதவீதம் மலிவானது.

சூப்பர் கூல்டு இயற்கை எரிவாயுவாக இருக்கும் Liquefied natural gas (LNG) எனப்படும் திரவ இயற்கை எரிவாயு, லாரிகள் பஸ் மற்றும் பிற கனரக வணிக வாகனங்களை நீண்ட தூரம் பயணிக்க உதவுகிறது. CNG யை விட LNG அதிக ஆற்றல் அடர்த்தி கொண்டிருப்பதே இதற்குக் காரணம்.

எரிபொருளாக பயன்படுத்தப்படும் LNG கிட்டத்தட்ட பூஜ்ஜிய கார்பன் உமிழ்வுகளையும் 85 சதவீதம் குறைவான NOx உமிழ்வுகளையும் கொண்டுள்ளது, இது மாசுபாட்டைக் குறைப்பதன் மூலம் காற்றின் தரத்தை மேம்படுத்தவும் உதவும். ஆரம்பக்கட்டமாக, 50 LNG நிலையங்கள் டெல்லி, மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய நான்கு பெருநகரங்களை இணைக்கும் கோல்டன் நாற்கர நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ளன.

அதிகாரிகளின் தகவலின்படி, முதல் 50 LNG நிலையங்கள் அடுத்த ஒரு ஆண்டில் அமைக்கப்படும். 2030 க்குள் இயற்கை எரிவாயு பயன்பாட்டின் பங்கை தற்போதைய 6.2 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்துவதற்கான உந்துதலின் ஒரு பகுதியாக LNG எரிபொருளைப் பயன்படுத்துவதை இந்திய அரசு ஊக்குவித்து வருகிறது.

LNG எரிபொருள் என்பது நாட்டில் நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ளும் வாகனங்களுக்கு சிறந்த மாற்றாகும். LNG எரிபொருளைப் பயன்படுத்துவதன் மூலம், தளவாட நிறுவனம் இயக்கச் செலவுகளைக் குறைக்க முடியும், மேலும் வாகனங்களுக்கு குறைந்த மாசுபாட்டைக் கொண்டு சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்கவும் முடியும். இதற்காக, நாடு முழுவதும் அதிக எண்ணிக்கையிலான LNG நிலையங்களை நிறுவுவதன் மூலம் இந்திய அரசு மக்களுக்கு உதவ முனைகிறது. இது வரவேற்கத்தக்க திட்டமாகவும் பார்க்கப்படுகிறது.

Views: - 32

0

0