6 வருடங்களுக்கு பிறகு மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் Microsoft Windows 11 அறிமுகம் | ஸ்பெஷலான 11 அம்சங்கள் இதோ!

Author: Dhivagar
25 June 2021, 1:13 pm
11 things you need to know about Windows 11
Quick Share

மைக்ரோசாப்ட் கடந்த மாதம் அதன் டெவலப்பர் மாநாட்டின் போது விண்டோஸ் 11 OS ஐ அறிமுகம் செய்வதாக முன்னோட்டத்தை வெளியிட்டது. ஆன்லைனில் வெளியீட்டுக்கு முன்னதாகவே சில நாட்களுக்கு இந்த OS  ஆன்லைனில் கசிந்தது. இருந்தாலும் இறுதியாக விண்டோஸ் 10 OS அறிமுகமாகி கிட்டத்தட்ட 6 வருடங்கள் ஆன நிலையில் இப்போது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விண்டோஸ் 11 OS புதிய ஒப்பனை தோற்றத்துடன் பல புதிய அம்சங்களுடனும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

11 things you need to know about Windows 11

நேற்று, மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 11 OS ஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இந்த புதிய OS ஆண்ட்ராய்டு பயன்பாடுகளுக்கான ஆதரவுடன், விட்ஜெட்களுக்கென புதிய சைட்பார் மற்றும் மேம்பட்ட தொடு அனுபவம் உள்ளிட்ட புதிய அம்சங்களை கொண்டுள்ளது.

 1. விண்டோஸ் 11 ஒரு புதிய Start மெனு மற்றும் புதுப்பிக்கப்பட்ட Start பொத்தான் உடன் வருகிறது, அவை இரண்டும் உங்கள் taskbar இன் நடுவில் வைக்கப்பட்டுள்ளன. விண்டோஸ் 11 இல் உள்ள UI விண்டோஸ் 10X இல் காணப்பட்ட UI ஐப் போன்றது.
 2. நீங்கள் பயன்படுத்தும் பயன்பாடுகளுக்குத் திரும்பிச் செல்ல நீங்கள் பயன்படுத்தக்கூடிய லைவ் டைல்ஸ் (Live Tiles) என்று ஒரு அம்சம் உள்ளது. இது முதலில் விண்டோஸ் 8 உடன் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் Chrome OS / Android இல் இருக்கும் launcher போன்றது. இவற்றில் பெரும்பாலானவை macOS இல் உள்ளதைப் போன்று இருக்கின்றன. வட்டமான மூலைப்பகுதிகளைக் கொண்டுள்ளது.
 3. இந்த விண்டோஸ் 11 பதிப்பிலும் லைட் மற்றும் டார்க் மோட்ஸ் உள்ளன மற்றும் இது மிகவும் அழகான தோற்றத்துடனும் இருக்கிறது.
 4. விண்டோஸ் 11 மைக்ரோசாப்டின் Snap Layout அம்சம் உள்ளது. இது வேறு வேறு பயன்பாடுகளுக்கு மாற எளிதாக இருக்கிறது. உங்கள் பயன்பாடுகள் எங்கு சேமிக்கப்பட்டுள்ளன என்பதை நினைவில் கொள்ள உதவும் ஒரு Snap Group Layout அம்சமும் உள்ளது. மானிட்டர் அல்லது பல திரைகளுடன் மடிக்கணினி இணைக்கப்பட்டிருக்கும் போது இந்த அம்சம் மிகவும் உதவியாக இருக்கும்.
 5. விண்டோஸ் 11 மிக சிறந்த செயல்திறன் கொண்டது. மைக்ரோசாப்ட் விண்டோஸ் 11 இன் புதுப்பிப்புகள் 40% சிறியவை மற்றும் திறம்பட செயல்படக்கூடியவை, ஏனெனில் அவை அனைத்து பின்னணியிலேயே நடக்கும்.
 6. வணிக பயனர்களுக்கும் வழக்கமான நுகர்வோருக்கும் ஏற்றவாறு Microsoft Teams நேரடியாக விண்டோஸ் 11 உடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. Taskbar இல் இருந்து Microsoft Teams அம்சத்தை அணுகலாம்.
 7. விண்டோஸ் 11 உங்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட, AI உடன் இயங்கும் feeds ஐ வழங்கும் விண்டோஸ் விட்ஜெட்டுகள் மற்றும் தொடுதல் சைகைகளைக் கொண்டுள்ளது. விண்டோஸ் விட்ஜெட்டுகளில் செய்தி ஊட்டம், வானிலை மற்றும் மேப்ஸ் போன்ற அம்சங்கள் உள்ளன. விண்டோஸ் 11 க்குள் உள்ளூர் படைப்பாளர்களுக்கு பண உதவி வழங்கவும் ஒரு வழி உள்ளது.
 8. டேப்லெட்டுகள் மற்றும் டச் ஸ்க்ரீன் வசதி கொண்ட சாதனங்களில் நீங்கள் பயன்படுத்தும் தொடுதல் சைகைகளும் விண்டோஸ் 11 உடன் மேம்படுத்தப்படுகின்றன. நீங்கள் தொடுதல் மற்றும் பென் ஆகியவற்றையும் விண்டோஸ் 11 OS உடன் பயன்படுத்த முடியும்.
 9. Inking மற்றும் வாய்ஸ் டைப்பிங் அம்சமும் விண்டோஸ் 11 இல் இடம்பெறுகிறது. சில பேனாக்களுடன், விண்டோஸ் 11 ஹாப்டிக் ஃபீட்பேக்கை ஆதரிக்கும். உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள விசைப்பலகையைப் போல தோற்றமளிக்க உங்கள் கீபோர்டை GIF களுடன் தனிப்பயனாக்கலாம்.
 10. விண்டோஸ் 11 உடன் உங்கள் சாதனங்களுக்கு ஆட்டோ HDR அம்சமும் கிடைக்கும், எனவே நீங்கள் கேம்கள் விளையாடும் போது மிகவும் சிறப்பான அனுபவம் கிடைக்கும். ஆனால், நிச்சயமாக அதை ஆதரிக்கக்கூடிய ஒரு மானிட்டர் உங்களுக்குத் தேவை. Xbox Game Pass எனும் XBox ஆப் விண்டோஸ் 11 உடன் ஒருங்கிணைக்கப்படுகிறது. இது xCloud ஒருங்கிணைப்பையும் உள்ளடக்கியது, எனவே நீங்கள் மைக்ரோசாஃப்ட் கிளவுட்டிலிருந்து கேம்களை ஸ்ட்ரீம் செய்யலாம்.
 11. கடைசியாக, ஆண்ட்ராய்ட் பயன்பாடுகள் விண்டோஸ் 11 உடன் கிடைக்கின்றன. அடோப் கிரியேட்டிவ் சூட் மற்றும் இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக் போன்ற பிரபலமான பயன்பாடுகள் உள்ளிட்ட விண்டோஸ் ஆப் ஸ்டோரில் முன்னர் கிடைக்காத பயன்பாடுகளை ஆதரிக்க மைக்ரோசாஃப்ட் ஸ்டோர் மறுவடிவமைப்பைப் பெற்றுள்ளது. 
11 things you need to know about Windows 11

விண்டோஸ் 11 க்கான வெளியீட்டு தேதி இன்னும் வெளியிடப்படவில்லை, ஆனால் புதிய OS ஐ இயக்கும் புதிய வன்பொருள்களுடன் அக்டோபரில் இது வெளியாகும் என்று தெரியவந்துள்ளது. விண்டோஸ் 10 பயனர்களுக்கு இலவச மேம்படுத்தலாக மைக்ரோசாப்ட் விண்டோஸ் 11 கிடைக்கும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. 

Views: - 414

0

0