இந்திய பாஸ்போர்ட் இருந்தால் இந்த 16 நாடுகளுக்கு விசா தேவையில்லை!

26 October 2020, 3:41 pm
16 countries allow visa-free entry to Indian passport holders
Quick Share

விசா இல்லாமல் வெளிநாடுகளுக்கு செல்ல முடியுமா என்று நீங்கள் யோசித்துக்கொண்டிருந்தால், உங்களுக்கான பதிலைத் தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். 

இப்போது இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு 16 நாடுகள் விசா இல்லாமலேயே அனுமதி வழங்கும். இந்த 16 நாடுகளில், பூட்டான் மற்றும் மொரீஷியஸ் போன்ற நாடுகளும் உள்ளன.

சரி என்னென்ன நாடுகள் சாதாரண இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு விசா-ஃப்ரீ வசதிகளை வழங்குகின்றன? பார்க்கலாம் வாங்க. 

இந்த 16 நாடுகளின் பட்டியலில் பார்படாஸ், நேபாளம், பூட்டான், மொரீஷியஸ், ஹைட்டி, ஹாங்காங் SAR, மாலத்தீவுகள், செனகல், செர்பியா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, கிரெனடா, டொமினிகா, சமோவா, செனகல், செயிண்ட் வின்சென்ட் மற்றும் தி கிரெனடைன்ஸ், நியு தீவு மற்றும் மொன்செராட் ஆகிய நாடுகள் உள்ளன.

தற்போதைய நிலவரப்படி, இந்தோனேசியாவும் மியான்மரும் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு Visa-On-Arrival வசதியை வழங்குகின்றன, அதே நேரத்தில் மலேசியா மற்றும் நியூசிலாந்து இந்தியர்களுக்கு e-Visa வசதிகளைக் கொண்டுள்ளன.

விசா பெறுவதில் எந்த கவலையும் இல்லாமல் பயணிக்க விரும்பும் பலருக்கும் இந்த தகவல் உதவியாக இருக்கும். பட்டியலில் உள்ள சில நாடுகள் சிறந்த சுற்றுலா தளங்களைக் கொண்டுள்ளன. மேலும், இவற்றில் பல நாடுகள் உங்களுக்கு அற்புதமான அனுபவத்தை வழங்கக்கூடியவை. 

ஆகவே, நாம் அனைவரும் இந்த COVID 19 தொற்றிலிருந்து வெளியேறியதும், நீங்கள் உங்கள் இந்திய பாஸ்போர்ட்டை மட்டும் வைத்துக்கொண்டு விசா இல்லாமல் இந்த 16 நாடுகளில் எதற்கு வேண்டுமானாலும் ஆனந்தமாக பயணிக்கலாம்.

Views: - 1

0

0