விலையுயர்வே இல்லாமல் கேடிஎம் 390 டியூக் மற்றும் RC 390 பைக்குகளில் செம அப்டேட்! டியூக் பாய்ஸ் செம்ம ஹேப்பி!

Author: Dhivagar
5 October 2020, 5:46 pm
2020 KTM 390 Duke and RC 390 now get MRF tyres; no change in price
Quick Share

கே.டி.எம் சமீபத்தில் இந்தியாவில் RC வரம்பை 2020 ஆம் ஆண்டிற்கான புதிய வண்ணத் திட்டங்களுடன் புதுப்பித்தது. புதுப்பித்தலின் ஒரு பகுதியாக, RC 390 பைக்கில் மெட்ஸெலர் டயர்களையும், 390 டியூக்கையும் MRF ரெவ்ஸ் C 1 டயர்களுடன் மாற்றியமைத்துள்ளது. 200 சிசி ரேஞ்ச் மற்றும் டியூக் 250 பைக்குகளிலும் இந்த MRF டயர் தான் இப்போது பயன்படுத்துகிறது.

இருப்பினும், மாற்றம் இருந்தபோதிலும், இரண்டு மோட்டார் சைக்கிள்களின் விலையும் எந்த மாற்றங்களும் இல்லாமல் உள்ளது. கேடிஎம் RC 390 பைக்கின் விலை ரூ.2.53 லட்சம் ஆகவும், 390 டியூக்கின் விலை ரூ .2.57 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) ஆகவும் உள்ளது. இந்த டயர்களின் மாற்றம் நிரந்தரமாக இருக்குமா அல்லது பைக்குகளின் விலை குறையுமா என்பது போன்ற  தகவல்கள் இப்போதைக்கு எதுவும் இல்லை.

புதிய வண்ணங்கள் மற்றும் டயர்களைத் தவிர, RC 390 முன்பைப் போலவே உள்ளது மற்றும் 373 சிசி, ஒற்றை சிலிண்டர் இன்ஜின் உடனே இயக்கப்படுகிறது, இது 42.9 bhp மற்றும் 37 Nm திருப்புவிசையை உற்பத்தி செய்கிறது.

Views: - 90

0

0