ரூ.16.90 லட்சம் மதிப்பில் 2021 ஹார்லி-டேவிட்சன் பான் அமெரிக்கா 1250 ADV பைக் இந்தியாவில் அறிமுகம்

28 April 2021, 6:00 pm
2021 Harley-Davidson Pan America 1250 ADV launched in India
Quick Share

ஹார்லி-டேவிட்சன் இந்தியா நிறுவனம் இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பான் அமெரிக்கா 1250 சாகச மோட்டார் சைக்கிளை ரூ.16,90,000 ஆரம்ப விலையில் அறிமுகம் செய்துள்ளது.

மோட்டார் சைக்கிள் இரண்டு வகைகளில் கிடைக்கும். அடிப்படை மாடலின் விலை ரூ.16,90,000 ஆகவும், ஹை-ஸ்பெக் பான் அமெரிக்கா 1250 ஸ்பெஷல் மாடலுக்கு ரூ.19,99,000 விலையும் (அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம், இந்தியா) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய பான் அமெரிக்கா 1250 பைக்கின் இரு வகைகளும் அவற்றின் உபகரணங்கள் மற்றும் அம்சங்களின் பட்டியலைப் பொறுத்து வேறுபடும். இரண்டு பைக்குகளிலும் கிடைக்கும் சில முக்கிய நிலையான அம்சங்களாக முழு எல்இடி விளக்குகள், புளூடூத்-இயக்கப்பட்ட 6.8 அங்குல வண்ண TFT தொடுதிரை டிஸ்பிளே மற்றும் யூ.எஸ்.பி C-டைப் அவுட்லெட் ஆகியவை கிடைக்கும்.

உயர்-ஸ்பெக் பான் அமெரிக்கா 1250 ஸ்பெஷல் பைக்கானது பிரீமியம் மின்னணு முறையில் சரிசெய்யக்கூடிய செமி-ஆக்டிவ் சஸ்பென்ஷன் சிஸ்டம், சென்டர் ஸ்டாண்ட், திடமான கிரிப், டயர் பிரஷர் கண்காணிப்பு அமைப்பு (TPMS), ஸ்டீயரிங் டேம்பர் மற்றும் ஒரு ‘இண்டஸ்ட்ரி ஃபர்ஸ்ட்’ அடாப்டிவ் ரைடு ஹைட் சிஸ்டம் (Adaptive Ride Height (optional) system) கொண்டுள்ளது.

ஸ்டாண்டர்ட் மாடல் ஐந்து சவாரி முறைகளைப் பெறுகிறது. ரோடு, ஸ்போர்ட், ரெயின், ஆஃப் ரோடு மற்றும் ஆஃப்-ரோடு பிளஸ் ஆகிய நான்கு முன்-திட்டமிடப்பட்ட முறைகளும் மற்றும் ஒரு தனிப்பயன் பயன்முறையும் ஆகிய ஐந்து சவாரி முறைகளை ஸ்டாண்டர்ட் மடல் பெறுகிறது. ஸ்பெஷல் மாடல் தனிப்பயனாக்கக்கூடிய இரண்டு கூடுதல் முறைகளைப் பெறுகிறது.

இயந்திர அமைப்பைப் பொறுத்தவரை, இரு பைக்குகளும் ஒரே 1,252 சிசி, ரெவலூஷன் மேக்ஸ்  1250 இன்ஜின் உடன் 9,000 rpm இல்  மணிக்கு 150 bhp அதிகபட்ச சக்தியையும், 6,750 rpm இல் 127 Nm உச்ச திருப்புவிசையையும் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. பைக்கின் டிரான்ஸ்மிஷன் விருப்பத்தில் ஆறு வேக யூனிட் உள்ளது.

பிஎம்டபிள்யூ R1250 GS மற்றும் இந்திய சந்தையில் வரவிருக்கும் டுகாட்டி மல்டிஸ்ட்ராடா V4 ஆகியவை இந்த பைக்கிற்கான முக்கிய போட்டியாளர்களாக இருக்கும்.

Views: - 149

0

0

Leave a Reply