2021 யமஹா MT-09 பைக்கின் விவரங்கள் கசிந்தன! 890 cc இன்ஜின் இடம்பெறுமா?

25 September 2020, 8:29 pm
2021 Yamaha MT-09 details leaked; to get bigger engine
Quick Share

யமஹா நிறுவனம் 2021 ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்ட MT-09 பைக்கை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த தகவல் ஜெர்மன் பெடரல் மோட்டார் போக்குவரத்து ஆணையத்தின் ஆவணத்தின் மூலம் கசிந்துள்ளது.

முன்னதாக ‘MTN850’ என்று பட்டியலிடப்பட்ட MT-09 இப்போது ‘MTN890’ என பட்டியலிடப்பட்டுள்ளது. 847 சிசி, இன்லைன்-மூன்று சிலிண்டர் இன்ஜினைப் பயன்படுத்தி வந்த ஸ்ட்ரீட்ஃபைட்டர் இப்போது 890 சிசி வரையிலான திறன் கொண்ட இன்ஜினை பெறும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.

மேலும், கசிந்த ஆவணம் 2021 யமஹா MT-09 இன் யூரோ 5 மோட்டார் சுமார் 120 hp உற்பத்தி செய்யும் திறன் கொண்டது என்பதையும் வெளிப்படுத்தியது; முந்தைய பதிப்பில் வழங்கப்பட்ட 112 பிஹெச்பியிலிருந்து இது கணிசமான அதிகரிப்பு கொண்டதாக பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு இறுதிக்குள் யமஹா புதிய MT-09 ஐ வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 2021 ஆம் ஆண்டின் முற்பகுதியில் மோட்டார் சைக்கிள் இந்தியாவிலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

Views: - 0 View

0

0