ரூ.6.61 லட்சம் விலையில் 2022 கவாசாகி நிஞ்ஜா 650 பைக் இந்தியாவில் அறிமுகம் | விவரங்கள் இங்கே

Author: Hemalatha Ramkumar
11 August 2021, 4:09 pm
2022 Kawasaki Ninja 650 launched in India
Quick Share

2022 கவாசாகி நிஞ்ஜா 650 பைக் இந்திய சந்தையில் ரூ.6.61 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  முந்தைய மாடலுடன் ஒப்பிடுகையில், சமீபத்திய 2022 நிஞ்ஜா 650 மாடல் ரூ.7,000 விலை உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாடல் வருடாந்திர புதுப்பிப்புடன், புதிய வண்ண விருப்பங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய புதுப்பிப்பின் ஒரு பகுதியாக, பைக் புதுப்பிக்கப்பட்ட அடையாளமான லைம் கிரீன் பெயிண்ட்வொர்க்கைப் பெற்றுள்ளது, இது இப்போது கீழ்பக்க அலங்கார வடிவமைப்புகளில் வெள்ளை நிறத்தையும் மற்றும் ரெட் பின்ஸ்ட்ரைப் கிராபிக்ஸையும் கொண்டுள்ளது.

2022 Kawasaki Ninja 650 launched in India

அது தவிர, இது மெட்டாலிக் கிரே மற்றும் லைம் கிரீன் ஹைலைட்ஸ் உடன் பியர்ல் ரோபோடிக் வெள்ளை வண்ண வடிவமைப்பையும் கொண்டுள்ளது. இந்த புதுப்பிப்புகளைத் தவிர, மீதமுள்ள மோட்டார் சைக்கிள் பாகங்கள் எந்தவித மாற்றங்களும் இல்லாமல் அப்படியே இருக்கும். சர்வதேச சந்தையில் இந்த பைக்கின் KRT பதிப்பும் உள்ளது. இந்த பதிப்பு லைம் கிரீன்/எபோனி/பியர்ல் பிலிஸ்ஸார்டு ஒயிட் வண்ணப்பூச்சு திட்டத்தில் வழங்கப்படுகிறது.

மோட்டார் சைக்கிள் அதன் முழு எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் வால் விளக்கு அமைப்பு ஆகியவற்றை அப்படியே தக்கவைத்தக்கொண்டுள்ளது. இதன் 4.3 இன்ச் முழு நிற TFT டிஸ்ப்ளே ப்ளூடூத் இணைப்போடு இணக்கமானது.

மோட்டார் சைக்கிளின் இதயமாக 649 சிசி, இணையான இரட்டை, திரவ-குளிரூட்டப்பட்ட இன்ஜின் உள்ளது, இது Z650 ஸ்ட்ரீட்ஃபைட்டர் மோட்டார் சைக்கிளிலும் உள்ளது. இந்த இன்ஜின் ஆறு வேக கியர்பாக்ஸுடன் ஒரு ஸ்லிப்பர் கிளட்ச் செயல்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் சஸ்பென்ஷன் கடமைகள் முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்ஸ் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் அபிசார்பர் மூலம் கையாளப்படுகிறது. பிரேக்கிங் கடமைகளை கையாள, இந்த பைக் முன்புறத்தில் இரட்டை டிஸ்க் பிரேக்குகளையும் பின்புறத்தில் ஒரு டிஸ்க் பிரேக் உடன் டூயல் சேனல் ABS ஆதரவையும் கொண்டுள்ளது.

Views: - 551

0

0