புதிய பன்பயன்பாட்டுச் செயலியை உருவாக்கிய திண்டுக்கல் சிறுவன்! கூகிளுடன் 28 ஆண்டுகள் ஒப்பந்தம்!

28 August 2020, 5:48 pm
9th grade student creates new communication app
Quick Share

திண்டுக்கல் மாவட்டம் தனியார்  பள்ளி ஒன்றில் 9 ஆம் வகுப்பு படித்து வரும் MN பிரனேஷ் எனும் 13 வயதே ஆன மாணவன் ஒரு புதிய தகவல் பரிமாற்றச் செயலியை உருவாக்கியுள்ளார். அந்த செயலியின் பெயர் “Jet Live Chat”.  இந்த செயலி இப்போது கூகிள் பிளே ஸ்டோரால் அங்கீகரிக்கப்பட்டு நேரலையில் உள்ளது.

திண்டுக்கல் மாணவன்

MN பிரனேஷ் திண்டுக்கல் மாவட்டம் தாமரைப்பாடியை சேர்ந்தவர். இவரின் தந்தை மாரிமுத்து மற்றும் அவரின் தாய் நாகலட்சுமி. இவர் வடமதுரை மம்மானியூர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

கம்ப்யூட்டர் கல்வி

தன்னுடைய ஐந்தாம் வகுப்பு முதலே கம்ப்யூட்டர் கல்வியைக் கற்று வந்த  பிரனேஷ், ‘ஜெட் லைவ் சேட்’ என்ற செயலியை உருவாக்கி உள்ளார். இந்த செயலியைக் கூகுள் பிளே ஸ்டோரில் சேர்க்கவும் விண்ணப்பித்துள்ளார்.

பிரனேஷின் இந்த ‘ஜெட் லைவ் சேட்’ செயலியை பரிசீலினை செய்த கூகுள் பிளே ஸ்டோர், பல கட்ட ஆய்விற்கு பின் அங்கீகரித்து பிளே ஸ்டோரில் அதனைச் சேர்த்துள்ளது.

இரண்டே வார முயற்சி

இந்த செயலியை வெறும் இரண்டே வார முயற்சியில் உருவாக்கியதாகவும், இந்த செயலியின் மூலம் ஆடியோ, வீடியோ போன் அழைப்புகள் போன்ற தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்ளலாம் என்றும் பிரனேஷ் கூறினார்.

Shareit மாற்று செயலி

இப்போது, சீன செயலிகள் தடையால் Shareit போன்ற செயலிகள் தடைச்செய்யப்பட்டுள்ளதால், அதிகளவு கொண்ட பைல்களை அனுப்பும் வசதியும் இந்தச் செயலியில் உள்ளதாம். உதாரணமாக ஒரு முழு திரைப்படத்தையே கூட  இந்த செயலியின் வாயிலாக அனுப்ப முடியும் என்றும் தெரிவித்துள்ளார் பிரனேஷ்.

28 ஆண்டுகள் ஒப்பந்தம்

மேலும் இந்தச் செயலி குறித்து கூறுகையில், முகநுாலில் ‘லைக்’ பதிவிடுவதுப் போல இந்தச் செயலியில் அனுப்பப்படும் தகவல்களின் மீதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறியீடுகளை கொண்டு கருத்து பதிவிடும் வாய்ப்பும் உள்ளது என்றும், தனது செயலிக்கு 2048 ஆம் ஆண்டு வரை கூகுள் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் தெரிவித்தார் பிரனேஷ்.

2018-ம் ஆண்டுக்கு பிறகு வந்த ஆன்ட்ராய்டு வெர்ஷன்களில் பதிவிறக்கம் செய்து இந்தச் செயலியைப் பயன்படுத்தலாம்.

அதற்கு முந்தைய ஆன்ட்ராய்டு மாடல் போன்களை ‘அப்டேட்’ செய்தும் இந்த செயலியைப் பயன்படுத்தலாம் என்றும் மாணவன் பிரனேஷ் தெரிவித்துள்ளார்.

Views: - 41

0

0