ACT ஃபைபர்நெட்டின் புதிய வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் சலுகை!

12 November 2020, 10:23 am
ACT Fibernet Offering Rs. 100 Cashback To New Customers
Quick Share

18 நகரங்களில் இணைய சேவைகளை வழங்கும் ACT ஃபைபர்நெட் தனது வாடிக்கையாளர்களுக்கு தீபாவளிக்கு புதிய சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய சலுகையின் கீழ், நிறுவனம் ரூ. 100 கேஷ்பேக் வழங்குகிறது. இருப்பினும், நிறுவனம் புதிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த வசதியை வழங்குகிறது. இந்த ஆண்டு தசராவின் போது இதேபோன்ற நன்மைகளை அறிமுகப்படுத்தியதை அடுத்து ACT ஃபைபர்நெட் இந்த சலுகையை இரண்டாவது முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது.

ACT ஃபைபர்நெட் கேஷ்பேக் சலுகை சில திட்டங்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ளது

நிறுவனம் கூறுகையில், இந்த சலுகை 100 Mbps மற்றும் அதற்கு மேற்பட்ட திட்டங்களில் கிடைக்கிறது. இந்த நன்மைகளைப் பெற, பயனர்கள் நிறுவனத்தின் வலைத்தளத்தின் மூலம் பணம் செலுத்த வேண்டும். புதிய இணைப்புகளுக்கு மட்டுமே சலுகை செல்லுபடியாகும், எனவே நிறுவனத்தின் வலைத்தளத்தின் வழியாக செல்ல வேண்டியது கட்டாயமாகும். அதற்கான வழிமுறைகளைப் பார்க்கலாம் வாங்க.

  • படி 1: நீங்கள் நிறுவனத்தின் வலைத்தளமான https://www.actcorp.in/new-broadband-connection ஐப் பார்வையிட வேண்டும்.
  • படி 2: 100 Mbps அல்லது அதற்கு மேற்பட்ட வேகத்தை வழங்கும்   ஏதேனும் ஒரு திட்டத்தை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • படி 3: பின்னர், நீங்கள் Tenure என்பதை கிளிக் செய்து Buy விருப்பத்தை பிரெஸ் செய்ய வேண்டும்.
  • படி 4: குறியீட்டை உள்ளிட்டு கட்டண முறைக்குச் செல்லவும்.

கேஷ்பேக் சலுகை கிடைக்கும் அனைத்து வட்டங்களின் பட்டியல்

இந்த சலுகை தற்போது கிடைத்து வருகிறது, இது நவம்பர் 20, 2020 வரை நீடிக்கும். இந்த சலுகை லக்னோ, மதுரை, நெல்லூர், ராஜமுந்திரி, திருப்பதி, விஜயவாடா, பெங்களூரு, சென்னை, டெல்லி, ஹைதராபாத், அகமதாபாத், விசாகப்பட்டினம், வாரங்கல், பெங்களூரு, சென்னை, டெல்லி, ஹைதராபாத், அகமதாபாத், கோவை, எலுரு, குண்டூர், ஜெய்ப்பூர் மற்றும் காக்கினாடா ஆகிய இடங்களில் 100 எம்.பி.பி.எஸ் மற்றும் அதற்கு மேற்பட்ட பிராட்பேண்ட் திட்டங்களில் நிறுவனம் வழங்குகிறது.

Views: - 30

0

0