குறைந்த வருமானம் கொண்ட சந்தாதாரர்களுக்காக புதிய சலுகைகள் | ஏர்டெல் அறிவிப்பு

17 May 2021, 7:00 am
Airtel announces new benefits for its low-income subscribers
Quick Share

ஞாயிற்றுக்கிழமை அன்று ஏர்டெல் தங்களது நெட்வொர்க்கைப் பயன்படுத்தும் குறைந்த வருமானம் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. ரூ.270 கோடி மதிப்புள்ள இந்த நன்மைகளை வழங்குவதன் மூலம், தற்போதைய தொற்றுநோய்களின் போது பயனர்கள் தொடர்ந்து தங்கள் நண்பர்களுடன் மற்றும் உறவினர்களுடன் இணைந்திருக்க உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஒரு முறை சலுகையாக தகுதியான வாடிக்கையாளர்களுக்கு ரூ.49 பேக்கை இலவசமாக வழங்குவதாக ஏர்டெல் தெரிவித்துள்ளது. இந்த பேக் உடன் ரூ.38 க்கான டாக்டைம் மற்றும் 100MB டேட்டா ஆகியவை 28 நாட்கள் வேலிடிட்டி உடன் கிடைக்கும். இந்த திட்டம் சுமார் 55 மில்லியன் குறைந்த வருமானம் கொண்ட ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் வழங்கப்படும்.

அதுமட்டுமல்லாது தேர்ந்தெடுக்கப்பட்ட சில ரீசார்ஜ் திட்டங்களில் இரண்டு மடங்கு நன்மைகளை வழங்குவதாகவும் ஏர்டெல் அறிவித்துள்ளது.

இந்த நன்மைகள் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு வரும் வாரத்தில் கிடைக்கும்.

தொற்றுநோய் பரவலால் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக ஏர்டெல் கடந்த ஆண்டு தனது குறைந்த வருமானம் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு இதே போன்ற நன்மைகளை அறிவித்தது. இந்த நன்மைகளில் ப்ரீபெய்ட் வேலிடிட்டி நீட்டிப்பு மற்றும் ரூ.10 கடன் ஆகியவை அடங்கியிருந்தது.

அதுமட்டுமில்லாது, ஏர்டெல் பயனர்களுக்கு உதவ வளங்களின் தொகுப்பையும் அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனம் தனது Airtel Thanks பயன்பாட்டின் Explore பிரிவில் இரண்டு புதிய துணைப்பிரிவுகளையும் சேர்த்துள்ளது.

முதல் துணைப்பிரிவு ‘Covid SOS’ என்று அழைக்கப்படுகிறது. மருந்துகள், ஆக்ஸிஜன், பிளாஸ்மா நன்கொடையாளர்கள், ஆம்புலன்ஸ், மருத்துவமனை படுக்கைகள் மற்றும் சோதனை மையங்கள் போன்ற பொருட்களுக்கான சரிபார்க்கப்பட்ட மற்றும் புதுப்பிக்கப்பட்ட தொடர்புகளை இந்த பிரிவு வழங்குகிறது.

CoWIN என்று அழைக்கப்படும் இரண்டாவது துணைப்பிரிவு, பயனர்கள் தடுப்பூசி மையத்தில் தமக்கும் தங்கள் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான முன்பதிவுகளைச் செய்ய உதவியாக இருக்கிறது.

Views: - 211

1

0