மலிவு விலையில் 4ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிடுகிறதா ஏர்டெல்? உண்மை தகவல் என்ன?

12 September 2020, 5:53 pm
Airtel can bring cheap 4G smartphones, talk is going on with the vendor
Quick Share

ஜியோ போன் 4ஜி 2018 இல் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து மிகவும்  பிரபலமடைந்து  மிகப்பெரிய மக்கள்  கூட்டத்தை ரசிகர் பட்டாளமாக மாற்றியுள்ளது. ஜியோவுடன் போட்டியிட மலிவான 4 ஜி ஸ்மார்ட்போன்களைக் கொண்டுவர ஏர்டெல் நிறுவனமும் தயாராகி வருவதாக செய்திகள் இணையத்தில் வெளியான வண்ணம் உள்ளன. 

இது  உண்மைதானா? உண்மையான தகவல்கள் என்ன? இரண்டு ஆண்டுகளாக, ஏர்டெல் நிறுவனம் இன்னும் பல விற்பனையாளர்களுடன் யோசனையிலேயே உள்ளது என்றும் ஏற்பாடுகளும் நடந்து வருவதாக கூறப்பட்டு வந்தது. இப்போது இந்த செய்தி மீண்டும் இணையத்தில் வலம் வருகிறது. ஏர்டெல் 4ஜி ஸ்மார்ட்போனுக்காக பல விற்பனையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்றும், இது ரூ.2,500 விலைக்குளாக இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தொலைபேசியில் ஏர்டெல்லின் சிம் இன்பில்டாக இருக்கும் என்றும் இலவச தரவு போன்ற சலுகைகளை வழங்கும் என்றும் கூறப்படுகிறது. ஏர்டெல் உள்நாட்டு மொபைல் நிறுவனமான மைக்ரோமேக்ஸ், லாவா மற்றும் கார்பன் மொபைல் போன்ற நிறுவனங்களுடன் மலிவான ஸ்மார்ட்போன்களுக்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது, இருப்பினும் இந்த விவகாரம் குறித்து ஏர்டெல் அதிகாரப்பூர்வமாக எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. 

இந்தியாவில் சுமார் 40 கோடி மக்கள் இன்னும் பட்டன் தொலைபேசிகளையே பயன்படுத்துகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அவர்களை தங்கள் நெட்வொர்க் சேவைக்கு இழுக்க பல திட்டங்களைக் கொண்டுள்ளனர். எனவே, ஏர்டெல் 4ஜி ஸ்மார்ட்போன் என்பதும்  நிறுவனத்தின் திட்டங்களில் ஒன்றாக இருக்கலாம். ஆனால், அதிகாரப்போர்வை அறிக்கையோ நிறுவனத்தின் சார்பில் எந்தவித தகவல்களோ இல்லாதா நிலையில் இது இப்போதைக்கு வெறும் வந்தந்திகள்  மட்டுமே. 

ஜியோவின் மலிவான 4ஜி ஸ்மார்ட்போன்: 

இந்த வார தொடக்கத்தில், ரிலையன்ஸ் ஜியோ டிசம்பர் 2020 அல்லது ஜனவரி 2021 க்குள் 10 கோடி மலிவான 4ஜி ஸ்மார்ட்போன்களை வழங்கும் என்று செய்திகள் வெளியானது. தரவு சலுகையும் தொலைபேசியில் கிடைக்கும். ஜியோவின் மலிவான 4 ஜி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கூகிள் நிறுவனத்துடன் இணைந்து அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல்களில் கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு கூகிள் ஜியோவில் 4.5 பில்லியன் டாலர் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளதை அடுத்து இந்த வளர்ச்சி குறித்த செய்தி வெளியாகியுள்ளது. இதன் விலை என்னவாக இருக்கும், என்னென்ன அம்சங்கள் இருக்கும் என்பதையும் சிறுது  காலம் பொறுத்திருந்து தான் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

Views: - 0

0

0