வீட்டிலேயே இருக்க போர் அடிக்குதா? புக் படிக்க ஆரம்பிங்க…. இலவசமாக படிக்க ஏர்டெல்லின் புது வசதி இருக்கே!! முழு விவரம் உள்ளே

26 March 2020, 6:57 pm
Coronavirus Lockdown: Airtel giving free access to e-book platform Juggernaut Books
Quick Share

தொலைதொடர்பு ஆபரேட்டர் ஆன பாரதி ஏர்டெல் வியாழக்கிழமை தனது மின் புத்தக தளமான ஜாகர்நாட் புக்ஸுக்கு இலவச அணுகலை வழங்கப்போவதாக அறிவித்துள்ளது.

“கோவிட்-19 இன் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை ஆதரிப்பதற்காக இந்திய மக்கள் வீட்டில் தங்கியுள்ளதால், வாசகர்கள் அவர்களின் ஸ்மார்ட்போன்களில் இப்போது ஜாகர்நாட் புத்தகங்களில் (Juggernaut Books) (முன்னர் ஏர்டெல் புத்தகங்கள் (Airtel Books) என்று அழைக்கப்பட்டது) ஆயிரக்கணக்கான சிறந்த புத்தகங்களையும் நாவல்களையும் இலவசமாக அணுகலாம் (ஆன்ட்ராய்டு / iOS)” என்று பாரதி ஏர்டெல் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஏர்டெல் 2017 இல் ஜாகர்நாட்டில் ஒரு மூலோபாய பங்குகளை வாங்கியது. வாசிப்பை ஊக்குவிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக ஜாகர்நாட் ஒரு புதுமையான ஆன்லைன் இலக்கிய விழாவையும் ஏற்பாடு செய்து வருகிறது.

கொரோனா வைரஸ் பரவி வரும் இந்த கஷ்டமான சூழ்நிலையில், ஏர்டெல் மற்றும் ஜாகர்நாட் ஆகியவை சமூக இடைவெளியை கருத்தில் கொண்டு மக்களை ஈர்ப்புடன் வைத்திருக்க கூடுதல் வழிகள் உள்ளன என்பதை உறுதிப்படுத்தவும் மக்களின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும் ஒரு புதிய வழியை இலவசமாக வழங்கியுள்ளது.

“ஒரு சிறந்த புத்தகம் பத்து நண்பர்களுக்கு சமம்” எனும் அப்துல் கலாமின் வார்த்தைக்கு ஏற்ப பாரதி ஏர்டெல் இந்த அறிவிப்பை வெளிட்டுள்ளது புத்தகம் படிக்கும் மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.