ஸ்மார்ட் ரீசார்ஜ் கீழ் புதிய ப்ரீபெய்டு திட்டம் | அசத்தலான திட்டத்தை அறிவித்தது ஏர்டெல்

Author: Dhivagar
26 June 2021, 4:27 pm
Airtel Introduces Rs. 128 Prepaid Pack Under Smart Recharge
Quick Share

ஜியோவுக்குப் போட்டியாக FUP அல்லாத புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்திய பின்னர், ஏர்டெல் ஸ்மார்ட் ரீசார்ஜ் பிரிவில் பல புதிய திட்டங்களை அறிமுகபடுத்துகிறது. அந்த வகையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட் ரீசார்ஜ் திட்டத்துடன் எந்த நன்மையும் இல்லாமல் வேலிடிட்டியை அதிகரிக்க மட்டுமே விரும்புவோருக்காகவே சிறப்பாக ஒரு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட் ரீசார்ஜ் திட்டத்திற்கான விலை ரூ.128 ஆகும்.

ஏர்டெல் ரூ. 128 ஸ்மார்ட் ரீசார்ஜ் திட்டம்: விவரங்கள் இங்கே

ரூ.128 விலையிலான ஸ்மார்ட் ரீசார்ஜ் திட்டம் பயனர்களுக்கு எந்தவொரு அழைப்பு வசதியோ, டேட்டா வசதியோ மற்றும் SMS நன்மையையோ வழங்காது. இந்த பேக் பயனர்களுக்கு 28 நாட்களுக்கு சேவைகளை கூடுதலாக பெற வடிவமைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், பயனர்கள் லோக்கல், STD அழைப்புகளுக்கு வினாடிக்கு 2.5 பைசாவும், லோக்கல் SMS ஒன்றுக்கு ரூ.1 மற்றும் தேசிய SMS க்கு ரூ.1.5 கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும். கூடுதலாக, ஏர்டெல் பயனர்கள் ஒரு MB க்கு 50 பைசா செலுத்தி டேட்டா சேவையைப் பயன்படுத்தலாம். ஆக அனைத்துக்கும் இன்னொரு திட்டத்தின்  உதவி வேண்டும். ரூ.128 திட்டத்துக்கு வெறும் வேலிடிட்டி மட்டுமே கிடைக்கும்.

இந்த ஸ்மார்ட் ரீசார்ஜ் திட்டத்தைத் தவிர, ஏர்டெல் ஒரே பிரிவின் கீழ் மேலும் இரண்டு திட்டங்களையும் வழங்குகிறது. இந்த திட்டங்களின் விலை ரூ.49 மற்றும் ரூ.79 ஆகும். ரூ.49 விலையிலான முதல் திட்டம் ரூ.38.52 டாக்டைம், 100MB டேட்டா, லோக்கல் மற்றும் STD அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 2.5 பைசா என்ற விகிதத்தில் 28 நாட்களுக்கு நன்மைகளை வழங்குகிறது.

ரூ.79 விலையிலான மற்றொரு பேக் 200MB டேட்டா, ரூ.128 டாக்டைம், உள்ளூர் மற்றும் STD அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 60 பைசா என்கிற விகிதத்தில் நன்மைகளை வழங்குகிறது. 

ஏர்டெல் டாக் டைம் திட்டங்கள்

இந்த திட்டங்களை தவிர, இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான ஏர்டெல் நாட்டில் ஆறு டாக்டைம் திட்டங்களை வழங்குகிறது. இந்த திட்டங்கள் ரூ.10, ரூ.20, ரூ.100, ரூ. 500, ரூ.1,000, மற்றும் ரூ.5,000 விலைகளில் கிடைக்கும். 

எனினும் இன்கமிங் அழைப்புகளை மட்டும் பெறுவதற்கு தங்கள் எண்ணை செயலில் வைத்திருக்க விரும்பும் பயனர்களுக்காக ஏர்டெல்லின் ஸ்மார்ட் ரீசார்ஜ் மற்றும் டாக் டைம் திட்டங்கள் உதவியாக இருக்கும். குறிப்பாக, இந்த திட்டம் கூடுதல் ரீசார்ஜ் திட்டத்துடன் அழைப்பு மற்றும் டேட்டா நன்மைகள் எதுவும் கிடையாது. ஆனால் உண்மையில் சொல்லப்போனால் இந்த திட்டத்துக்கு ரீசார்ஜ் செய்து வேலிடிட்டியைப் பெறுவதற்கு கூடுதலாக பணம் கொடுத்து மாதாந்திர திட்டத்தையே பெற்றுக்கொள்ளலாம்.

Views: - 402

0

0