அட்ராசக்க! வெறும் 3 ரூபாய்க்கு 1 ஜிபி டேட்டா ஏர்டெல்ல கிடைக்குதா?! இது தெரியாம போச்சே!

12 July 2021, 3:09 pm
Airtel Offering 1GB Data For Rs. 3: Here's How To Get It
Quick Share

ஏர்டெல் மற்றும் வோடபோன்-ஐடியா நிறுவனங்கள் ஜியோ வழங்குவதை விட அதிக விலையில் டேட்டா திட்டங்களை வழங்குகின்றன. இதனாலேயே பல பயனர்கள் ஜியோ பக்கமாக தாவினார். 

இருப்பினும், இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தொலைத் தொடர்பு ஆபரேட்டர் ஏர்டெல் 1 ஜிபி டேட்டாவை சுமார் ரூ.3.50 விலையில் வழங்கும் ஒரு மலிவு விலையிலான திட்டத்தை கொண்டுள்ளது. ஆனால் விலை அதிகமாக இருப்பதால் இந்த திட்டத்தைப் பற்றி நிறைய பேருக்கு தெரிவதில்லை. அந்த திட்டத்தின் விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஏர்டெல்லின் ரூ.558 திட்டம் 56 நாட்களுக்கு தினசரி 3 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு மற்றும்  தினசரி 100 SMS ஆகியவற்றை வழங்குகிறது.

ஆக மொத்தம் 168 ஜிபி டேட்டாவை இந்த திட்டத்துடன் ஏர்டெல் வழங்குகிறது. அதாவது பயனர்கள் 1 ஜிபி டேட்டாவை ரூ.3.32 விலையில் பெற முடியும். ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் திட்டங்களை விட ஏர்டெல் வழங்கும் ரூ.558 ப்ரீபெய்ட் திட்டம் மிகவும் மலிவு விலையிலானது. ஆனால், பலருக்கும் இது தெரிவதில்லை.

இது தவிர, இந்த ப்ரீபெய்ட் திட்டம் அமேசான் மொபைல் பதிப்பு, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம், இலவச ஹலோ ட்யூன்ஸ், அப்பல்லோ 24 | 7 க்கு மூன்று மாத அணுகல், விங்க் மியூசிக்கிற்கான இலவச அணுகல், ஷா அகாடமியிலிருந்து இலவச படிப்புகள், FASTag இல் ரூ.100 கேஷ்பேக் ஆகியவற்றை வழங்குகிறது. 3 ஜிபி டேட்டாவையும் கொடுத்த இவ்வளவு சலுகைகளையும் கொடுக்குற இந்த திட்டம் உங்களுக்கு கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்குமென்று நம்புகிறோம்.

எனவே மிகவும் மலிவு விலையில் தினமும் 3 ஜிபி டேட்டா எதிர்பார்க்கும் பயனர்கள் ரூ.558 திட்டத்தை தாராளமாக தேர்வு செய்யலாம்.

Views: - 168

0

0