இந்த விஷயத்தில் ஜியோவை விட சிறப்பாக இருப்பது ஜியோ தான்!
29 September 2020, 5:24 pmஎன்னதான் ஜியோ இந்தியாவின் தொலைத்தொடர்பு துறையின் ராஜாவாக இருந்தாலும், ஓபன்சிக்னலின் புதிய அறிக்கையின்படி, தரமான சேவைகளை வழங்குவதில் ஏர்டெல்லுக்கு அடுத்ததாகவே உள்ளது. வீடியோ, குரல் அனுபவம், கேமிங் மற்றும் பதிவிறக்க வேகம் ஆகியவற்றில் ஏர்டெல் முன்னணியில் உள்ளது என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.
லண்டனை தளமாகக் கொண்ட நெட்வொர்க் அனலிட்டிக்ஸ் நிறுவனமான ஓபன் சிக்னல், வோடபோன்-ஐடியா மே-ஜூலை காலகட்டத்தில் சிறந்த பதிவேற்ற வேகத்தை வழங்குவதாக தெரிவித்தது. அதே சமயத்தில், ரிலையன்ஸ் ஜியோவும் சிறந்த 4 ஜி கவரேஜை வழங்கியது.
ஏர்டெல் 10.4 Mbps பதிவிறக்க வேகத்தை வழங்குவதாகவும், வோடபோன்-ஐடியா 10.1 Mbps வழங்குவதாகவும், மே-ஜூலை காலகட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ 6.9 Mbps வேகத்தை மட்டுமே வழங்குவதாகவும் அறிக்கை தெரிவித்துள்ளது.
மறுபுறம், வோடபோன்-ஐடியா 3.5 Mbps பதிவேற்ற வேகத்தை வழங்குகிறது. இதேபோல், ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இரண்டும் முறையே 2.8 Mbps மற்றும் 2.3 Mbps பதிவேற்ற வேகத்தை வழங்க முடிந்தது.
“ஏர்டெல் தொடர்ச்சியாக நான்காவது முறையாக வீடியோ எக்ஸ்பீரியன்ஸ் விருதை வென்றதுடன் – இரண்டாவது இடத்தில் உள்ள Vi ஐ விட 57.6 மதிப்பெண்ணுடன், 3.4 புள்ளிகள் (6.3 சதவிகிதம்) முன்னிலையில் – ஏர்டெல் பயனர்கள் மட்டுமே ஒரு நல்ல வீடியோ அனுபவத்தை(55-65) அனுபவிக்க முடிந்தது” என்றும் கூறியது.