100 ஜிபி வரை டேட்டா வழங்கும் ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டங்களின் பட்டியல்: எந்த திட்டம் சிறந்தது?

27 November 2020, 8:35 am
Airtel, Reliance Jio, Vi Work From Plans That Offer Data Up To 100GB
Quick Share

இந்த கொரோனா தொற்றுநோயினால் விதிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கும் Work From Home திட்டங்கள் மிகவும் பிரபலமாகிவிட்டன. இணைய பயன்பாடு அதிகரித்துள்ளதால் இந்த Work From Home திட்டங்கள் பயனர்களுக்கு கூடுதல் தரவு சேவைகளை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இந்த திட்டங்கள் அனைத்தும் மலிவானவை என்று சொல்லிவிட முடியாது, ஆனால் மொபைல் மூலம் தரவைப் பயன்படுத்துபவர்களுக்கு நல்ல நன்மைகளை வழங்குகின்றன. அந்த வகையில், ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் Vi (வோடபோன்-ஐடியா) ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் அனைத்து 4ஜி டேட்டா வவுச்சர்களையும் இங்கே பட்டியலிடுகிறோம்.

Work From Home திட்டங்கள்: விவரங்கள்

தற்போது, ​​இந்த திட்டத்தின் கீழ் ஏர்டெல் ஒரு திட்டத்தை மட்டுமே வழங்குகிறது. உங்களின் தற்போதைய திட்டம் நீடிக்கும் வரை ரூ.251 திட்டம் 50 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதாவது இந்த திட்டத்திற்கென வேலிடிட்டி எதுவும் இல்லை. ரூ.98 வவுச்சரும் உள்ளது, இது 28 நாட்களுக்கு 12 ஜிபி தரவை வழங்குகிறது. 

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மூன்று திட்டங்களை ரூ.151, ரூ.201, மற்றும் ரூ.251 விலையில் வழங்குகிறது. இதில் ரூ.151 திட்டம் தற்போது முறையே 30 ஜிபி தரவு, 40 ஜிபி மற்றும் 50 ஜிபி தரவை வழங்குகிறது. இந்த திட்டங்கள் 30 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

இந்த திட்டங்களைத் தவிர, ரிலையன்ஸ் ஜியோ ஒரு கிரிக்கெட் பேக் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் திட்டங்களுடன் தரவு நன்மைகளையும் வழங்குகிறது. முதலில் ரூ.499 திட்டம், 56 நாட்களுக்கு எந்த அழைப்பும் இல்லாமல் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மறுபுறம், ரூ.399 திட்டம் டிஸ்னி + ஹாட்ஸ்டார் VIP பேக்கை வழங்குகிறது.

இதேபோல், வோடபோன்-ஐடியா திட்டங்களும் உள்ளன, அவை 50 ஜிபி முதல் 100 ஜிபி டேட்டா வரை வழங்குகின்றன. இந்த திட்டங்கள் ரூ.251, ரூ.351, மற்றும் ரூ.355 விலைகளில் கிடைக்கின்றன. இந்த திட்டங்கள் 28 நாட்கள் மற்றும் 56 நாட்களுக்கு செல்லுபடியாகும். இது ஒரு ஜீ5 பிரீமியம் சந்தாவையும் கொண்டுள்ளது. 

இந்தப் பிரிவில் கூடுதல் தரவு நன்மைகளுடன் Vi கூடுதல் திட்டங்களை வழங்குகிறது என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.