ஏர்டெலின் அடுத்த டார்கெட்…செயற்கைகோள் இணைய சேவை…!!!

Author: Hemalatha Ramkumar
11 October 2021, 7:07 pm
Quick Share

இங்கிலாந்தை தளமாகக் கொண்ட உலகளாவிய தகவல் தொடர்பு செயற்கைக்கோள் நிறுவனமான OneWeb, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து அதன் செயற்கைக்கோள்களை அதன் மிகப்பெரிய ஏவுகணை வாகனமான GSLV-M.K III மற்றும் PSLV ஆகியவற்றில் விண்ணில் செலுத்த ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் பாரதி ஏர்டெல் மிகப்பெரிய பங்குதாரராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

OneWeb 650 செயற்கைக்கோள்களை கீழ்-பூமியின் சுற்றுப்பாதையில் (LEO) உருவாக்க திட்டமிட்டுள்ளது. இது SpaceX இன் ஸ்டார்லிங்கைப் போலவே விண்வெளி வழியாக இணைய இணைப்பை வழங்கும். இப்போதைக்கு, இது போன்ற 322 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி உள்ளது. மேலும் ISROவின் சேவைகளைப் பயன்படுத்தி அதன் மேலும் சில செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி அதன் ஏவுதல் திறனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது.

இந்த கூட்டு செயல்பாட்டால் Oneweb ISROவின் GSLV-M.K III ஏவுதள வாகனத்தைப் பயன்படுத்தி செயற்கைக்கோள்களை ஏவிய முதல் தனியார் நிறுவனமாக மாறும். இந்த ராக்கெட் பத்து டன் வரை கீழ்-பூமியின் சுற்றுப்பாதையிலும், நான்கு டன் ஜியோசிங்க்ரோனஸ் டிரான்ஸ்ஃபர் ஆர்பிட்டிலும் செயற்கைகோள்களை எளிதில் செலுத்த முடியும்.

இந்திய விண்வெளி சங்கத்தின் துவக்க விழாவில் சுனில் பார்தி மிட்டால் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அவர் கூறியதாவது“ISRO – PSLVயின் பணிக்குழுவை பயன்படுத்த நாங்கள் (Oneweb) ஒரு ஏற்பாட்டை செய்துள்ளதை இன்று உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.”

“2022 ஆம் ஆண்டின் மத்தியில் OneWeb தனது சேவைகளை இந்தியாவில் தொடங்கும்.” என்று கூறி முடித்தார் மிட்டல். விண்வெளியில் 322 செயற்கைகோள்களை மட்டுமே பெற்றுள்ள OneWeb, அடுத்த ஆண்டு மத்தியில் தனது சேவைகளை முழு நாட்டிற்கும் – அதாவது கடல்கள், பாலைவனங்கள், காடுகள் மற்றும் முக்கியமாக, கிராமப்புறங்களுக்கும் வழங்கும்.

Views: - 599

0

0