DIVO மூவிஸ் உடன் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் கூட்டணி! ஓ… இதுக்குத்தானா?
1 March 2021, 6:12 pmதென்னிந்தியாவைச் சேர்ந்த டிஜிட்டல் மீடியா மற்றும் இசை நிறுவனமான டிவோ இன்று ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் உடன் மூலோபாய உள்ளடக்க பகிர்வு கூட்டணியை அறிவித்துள்ளது. ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பயன்பாட்டில் தங்களது அனைத்து தமிழ் திரைப்படங்களின் (பழைய மற்றும் புதிய), பிரத்தியேக பிரீமியர்களை வழங்க டிவோ ஏர்டெலுடன் கூட்டு சேர்ந்துள்ளது.
முக்கிய டிவி / ஸ்டுடியோ நெட்வொர்க்குகளுக்கு வெளியே தென்னிந்தியாவின் மிகப்பெரிய திரைப்பட உரிமைகள் மற்றும் உரிமங்களை வைத்திருப்பவர்களில் டிவோ நிறுவனமும் ஒன்று.
ஆண்ட்ராய்டு மற்றும் iOS இல் இலவசமாகக் கிடைக்கும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பயன்பாடு, இப்போது டிவோ மூவிஸ் என்ற ஒரு புதிய சேனலைக் கொண்டிருக்கும். ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீமின் பயனர்கள் இப்போது திரைப்படங்கள், டிஜிட்டல் பிரீமியர்ஸ், சமீபத்திய ஹிட்ஸ் மற்றும் ரஜினிகாந்த், விஜய், அஜித், சிம்பு, ஜி.வி.பிரகாஷ் மற்றும் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் போன்ற பிரத்யேக தமிழ் உள்ளடக்கங்களைக் காண்பிக்கும். ஏர்டெல்லின் கோலிவுட் பயனர்களுக்கு சேவை வழங்கும் முதல் பிரத்யேக சேனலாக இது இருக்கும்.
ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீமில் உள்ள டிவோ மூவிஸ் ரீசார்ஜ்களுடன் முழுமையான மற்றும் தொகுக்கப்பட்ட சந்தாக்களாக கிடைக்கும். சந்தாக்களின் விலை மாதந்தோறும் 30 ரூபாய் மட்டுந்தான்.
0
0