ஏலியன்வேர் x15 R1 மற்றும் x17 R1 கேமிங் மடிக்கணினிகள் அறிமுகம் | விலை & விவரங்கள் இங்கே

3 June 2021, 4:27 pm
Alienware x15 R1 and x17 R1 gaming laptops launched
Quick Share

டெல் நிறுவனத்திற்கு சொந்தமான ஏலியன்வேர் பிராண்ட் அமெரிக்காவில் x15 R1 மற்றும் x17 R1 எனப்படும் புதிய x-சீரிஸ் கேமிங் மடிக்கணினிகளை அறிமுகம்  செய்துள்ளது. அவை $2,000 (சுமார் ரூ. 1.46 லட்சம்) ஆரம்ப விலையில் கிடைக்கின்றன.

இந்த லேப்டாப்கள் ஒரு சிறிய மற்றும் இலகுரக வடிவமைப்புடன் கட்டமைக்கப்பட்டவை, 11 வது தலைமுறை இன்டெல் கோர் H-சீரிஸ் சிப்செட்டுகள், ஒரு மேம்பட்ட குளிரூட்டும் தொழில்நுட்பம் மற்றும் 360 Hz டிஸ்பிளே விருப்பங்களுடன் வருகின்றன.

ஏலியன்வேர் x15 R1 மற்றும் x17 R1 ஆகியவை மெலிதான உடலமைப்பையும், Element 31 எனப்படும் ‘thermal interface material’ கொண்டுள்ளது, இது வெப்ப எதிர்ப்பில் 25% மேம்படுத்தலை வழங்குகிறது.

ஏலியன்வேர் x15 R1 லேப்டாப் 360 Hz, 1080p ரெசல்யூஷன் மற்றும் 240 Hz, 1440p ரெசல்யூஷன் ஆகியவற்றுடன் 15.6 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

ஏலியன்வேர் X17 R1 லேப்டாப் 360 Hz, 1080p பேனல் அல்லது 120 Hz, 1440p ரெசல்யூஷன் உடன் 17.3 அங்குல திரையைக் கொண்டுள்ளது.

ஏலியன்வேர் x15 R1 மற்றும் x17 R1 ஆகியவை பல டைப்-A போர்ட்கள், டைப்-C போர்ட்கள் மற்றும் ஒரு உள்ளமைக்கப்பட்ட ஈதர்நெட் போர்ட் உடன் (மாதிரியைப் பொறுத்து) பொருத்தப்பட்டுள்ளது. ஏலியன்வேர் X17 R1 மேம்பட்ட கேமிங் அனுபவத்திற்கான விருப்பமாக Cherry MX மெக்கானிக்கல் கீபோர்டு உடன் வருகிறது.

NVIDIA GeForce RTX 3080 (16 ஜிபி வரை நினைவகம் வரை) கிராபிக்ஸ், 64 ஜிபி வரை DDR 4 RAM மற்றும் 4 TB வரை ஸ்டோரேஜ், 11 வது தலைமுறை இன்டெல் கோர் i9 11900H / 11980HK செயலி மூலம் ஏலியன்வேர் x15 R1 மற்றும் x17 R1 லேப்டாப்கள் ஆற்றல் பெறுகின்றன.

ஏலியன்வேர் X15 R1 87Wh பேட்டரி, 240W பவர் அடாப்டர் மற்றும் விரைவான முக பயோமெட்ரிக் உள்நுழைவுக்கு விண்டோஸ் ஹலோ IR கேமராவுடன் வருகிறது.

ஏலியன்வேர் x15 R1 மற்றும் x17 R1 லேப்டாப்களுக்கு முறையே $2,000 (தோராயமாக ரூ.1.46 லட்சம்) மற்றும் $2,100 (தோராயமாக ரூ.1.54 லட்சம்) விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வரையறுக்கப்பட்ட உள்ளமைவுகள் ஏற்கனவே அமெரிக்காவில் உள்ளன, அதே நேரத்தில் உயர்மட்ட வகைகள் ஜூன் 15 முதல் கிடைக்கும்.

Views: - 155

0

0

Leave a Reply