இனிமேல் இந்தி மொழியிலும் பேசும் அமேசான் அலெக்சா!
18 September 2020, 8:14 pmஅலெக்சா இப்போது இந்தியாவில் இந்தி மொழியில் மில்லியன் கணக்கான ஸ்மார்ட்போன் பயனர்களுக்குக் கிடைக்கிறது. இப்போது தொடங்கி, அலெக்சா ஆப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தங்கள் ஆண்ட்ராய்டு அல்லது iOS ஸ்மார்ட்போன்களில் இந்தி மொழியில் அலெக்ஸாவுடன் தொடர்பு கொள்ளலாம்.
அமேசான் எக்கோ சாதனங்களில் இந்தி மொழி ஆதரவு முதன்முதலில் கடந்த ஆண்டு செப்டம்பரில் சேர்க்கப்பட்டது. இப்போது, ஆண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்களில் உள்ள அலெக்சா பயன்பாட்டிற்கும் இந்தி மொழிக்கான ஆதரவு கிடைத்துள்ளது.
அலெக்சா பயன்பாட்டில் இந்தி பயன்படுத்த – அலெக்சா பயன்பாட்டைத் திறந்து, settings >> Alexa on this phone >> என்பதற்குச் சென்று இருக்கு ம் மொழிகளில் ‘हिंदी’ மொழியைத் தேர்ந்தெடுக்கவும். இந்த அறிவிப்பு இந்தியாவில் அலெக்ஸாவின் இந்தி ஆதரவின் முதல் ஆண்டு நினைவு நாளில் வருகிறது.
அமேசான் அலெக்சா என்பது அமேசான் எக்கோ சாதனங்களுக்கு சக்தி அளிக்கும் மூளை போன்ற என்று சொல்லலாம். கடந்த ஆண்டில் அலெக்சாவுக்கு இந்தி ஆதரவை அறிமுகப்படுத்தியதில் இருந்து அமேசான் 60 க்கும் மேற்பட்ட புதிய அம்சங்களைச் சேர்த்துள்ளது.
அமேசான் 6 புதிய அலெக்சா அசல் பாடல்கள் மற்றும் கவிதைகளையும், இந்தியில் 20 புதிய கதைகளையும் சேர்த்துள்ளது.
இந்த அறிவிப்பு குறித்து அமேசான் இந்தியாவின் அலெக்சாவின் நாட்டின் தலைவர் புனேஷ் குமார் கூறுகையில், “இந்தியாவின் தனித்துவமான கலாச்சார மற்றும் மொழியியல் பன்முகத்தன்மை அலெக்ஸாவை நாட்டிலுள்ள பயனர்களுக்கு மிகவும் பொருத்தமானதாக மாற்ற எப்போதும் எங்களுக்கு ஊக்கமளிக்கிறது. இந்தியை அறிமுகப்படுத்துவது அலெக்ஸாவை நூற்றுக்கணக்கான மில்லியன் மக்களுக்கு அணுகக்கூடியதாக மாற்றியுள்ளது. இயற்கை மொழி புரிதலில் நாங்கள் பல மேம்பாடுகளைச் செய்துள்ளோம். அலெக்ஸாவால் ஆரம்பத்தில் சில சொற்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை, ஆனால் இப்போது அதனால் புரிந்துக்கொள்ள முடிகிறது. இதேபோல், நாங்கள் தொடர்ந்து அலெக்ஸாவை மேம்படுத்துவோம்” என்று கூறினார்.