ஆகஸ்ட் 6ம் தேதி தொடங்கும் அமேசான் சுதந்திர தின ஆஃபர் சேல்… மிஸ் பண்ணிடாதீங்க!!!

Author: Hemalatha Ramkumar
3 August 2022, 7:23 pm
Quick Share

இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் விரைவில் ‘அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் சேல் 2022’-யைத் தொடங்க உள்ளது. நிறுவனத்தின் கூற்றுப்படி, சுதந்திர தினத்தை ஒட்டிய சிறப்பு அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனை 2022 ஆகஸ்ட் 06, 2022 முதல் தொடங்கி ஆகஸ்ட் 10, 2022 வரை தொடரும்.

வாடிக்கையாளர்கள் 4 நாள் விற்பனையின் போது லேப்டாப்கள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற எலக்ட்ரானிக் கேஜெட்கள் மீது ஏராளமான சலுகைகள், தள்ளுபடிகள் மற்றும் பிற நன்மைகளை எதிர்பார்க்கலாம். இந்த விற்பனையின் போது வெவ்வேறு பொருட்களுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடியை வழங்குவதோடு, SBI கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் கூடுதல் பலனைப் பெறுவார்கள்.

அமேசான் நிறுவனம் பண்டிகை காலத்தை முன்னிட்டு, வரவிருக்கும் சலுகைகள் மற்றும் இச்சலுகைகளுக்கான டீஸர்களையும் வெளியிட்டுள்ளது. அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் சேல், விற்பனையின் போது இரவு 8 மணி முதல் நள்ளிரவு வரை தள்ளுபடிகள் மற்றும் வரையறுக்கப்பட்ட கால சலுகைகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது வாடிக்கையாளர்கள் என்ன எதிர்பார்க்கலாம்?
*அறிக்கைகளின்படி, அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் சேல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஆக்சஸரிகளுக்கு 40 சதவீதம் வரை தள்ளுபடியை வழங்கும்.
*அமேசான் கட்டணமில்லா EMI கட்டண முறைகள், எக்ஸ்செயின்ஞ் சலுகைகளை வழங்க வாய்ப்புள்ளது
* வாடிக்கையாளர்கள் ஃபிளாக்ஷிப் மற்றும் பிரீமியம் ஸ்மார்ட்போன்களில் சிறப்பு சலுகைகளை எதிர்பார்க்கலாம்
*வரவிருக்கும் அமேசான் விற்பனையில் ரூ. 40,000 வரை தள்ளுபடி கிடைக்கும். லேப்டாப்கள் மற்றும் டேப்லெட்டுகளில் 45 சதவீதம் தள்ளுபடி மற்றும் ஹெட்ஃபோன்களில் 75 சதவீதம் வரை தள்ளுபடி வழங்க உள்ளது.
அமேசான் அதன் வரவிருக்கும் விற்பனையின் போது கிண்டில், எக்கோ ஸ்பீக்கர்கள் மற்றும் ஃபயர் டிவி ஸ்டிக் ஆகியவற்றிலும் தள்ளுபடியை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 2343

0

0