முன்னதாக ரயில் டிக்கெட் இப்போ…. LPG சிலிண்டர்! தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் அமேசான் இந்தியா!

5 November 2020, 9:33 am
Amazon India partners with HP Gas to book, make payments for LPG cylinders
Quick Share

அமேசான் இந்தியா இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் உடன் கூட்டணியை அறிவித்துள்ளது. இந்த கூட்டணி மூலம், இந்தியாவில் அமேசான் வாடிக்கையாளர்கள் தங்கள் HP கேஸ் சிலிண்டர் மறு நிரப்பல்களுக்கு முன்பதிவு செய்து பணம் செலுத்த முடியும்.

வாடிக்கையாளர்கள் அமேசான் இந்தியா வலைத்தளத்திலோ அல்லது அமேசான் செயலியிலோ உள்ள அமேசான் பே பிரிவுக்குச் சென்று சிலிண்டரை முன்பதிவு செய்து UPI, கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள் மற்றும் நெட்-பேங்கிங் போன்ற டிஜிட்டல் பயன்முறையைப் பயன்படுத்தி பணம் செலுத்தலாம்.

அமேசான் பே தாவலின் கீழ் உள்ள ‘LPG’ பிரிவுக்கு அல்லது முகப்புப்பக்கத்தில் உள்ள “Pay Bills” பிரிவுக்குச் சென்று வாடிக்கையாளர்கள் தங்கள் HP கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்யலாம். 

மறு நிரப்பல் முன்பதிவுக்குக் கட்டணங்களைச் செலுத்த வாடிக்கையாளர்கள் HP கேஸ் உடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அல்லது 17 இலக்க எல்பிஜி ஐடியை உள்ளிட வேண்டும். கட்டணம் செலுத்தியவுடன், வாடிக்கையாளர்கள் கட்டணம் பெறப்பட்டதை உறுதிப்படுத்தும் SMSஐ பெறுவார்கள் மற்றும் அமேசான் இந்தியா தளத்தில் விநியோகஸ்தர்கள் விவரங்களைக் காண முடியும்.

அமேசான் பே மூலம் முன்பதிவு செய்து பணம் செலுத்தும்போது வாடிக்கையாளர்கள் ரூ.50 வரை கேஷ்பேக் பெறலாம் என்று அமேசான் கூறுகிறது. கூடுதலாக, அவர்கள் ஒவ்வொரு மாதமும் விவரங்களை மீண்டும் உள்ளிட வேண்டிய அவசியமின்றி பரிவர்த்தனையை மீண்டும் செய்ய முடியும்.

முன்னதாக, IRCTC உடன் அமேசான் கூட்டணி அமைத்து ரயில் டிக்கெட் முன்பதிவு வசதியினை வழங்கியதை அடுத்து இப்போது சிலிண்டர் புக்கிங் வசதியையும் அமேசான் வழங்குவது ஆன்லைன் பிரிவில் அமேசானின் ஆதிக்கத்தைக் காட்டுகிறது.

Views: - 20

0

0

1 thought on “முன்னதாக ரயில் டிக்கெட் இப்போ…. LPG சிலிண்டர்! தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் அமேசான் இந்தியா!

Comments are closed.