அடடா மழைடா… ஆஃபர் மழைடா… | ஆப்பிள் முதல் iQOO வரை பயனர்களுக்கு ஆஃபர்களை அள்ளிக்கொடுக்கும் அமேசான்

14 July 2021, 4:53 pm
Amazon is offering discounts on iQOO 7 Legend, Apple AirPods, and more
Quick Share

அமேசான் தனது தளத்தில் ஒரு கூப்பன் கார்னிவல் விற்பனையை நடத்துகிறது மற்றும் சில தயாரிப்புகளுக்கு ரூ.2,000 வரை தள்ளுபடி வழங்குகிறது. IQOO 7 லெஜண்ட், ஓப்போ ரெனோ 4 ப்ரோ, HP மடிக்கணினிகள், நோக்கியா தொலைபேசிகள் மற்றும் பல தயாரிப்புகளும் இதில் அடங்கும். Mi 11X, ஒன்பிளஸ் 9, சாம்சங் கேலக்ஸி M32 மற்றும் பல ஸ்மார்ட்போன்களுக்கு வங்கி மற்றும் பரிமாற்ற சலுகைகள் கிடைக்கும். அமேசானில் கிடைக்கும் சமீபத்திய ஆஃபர்கள் மற்றும் சலுகைகளைப் பற்றி மேலும் அறிய தொடர்ந்து படிக்கவும்.

IQOO 7 லெஜண்ட் 5G போனிற்கு ரூ.2,000 தள்ளுபடி கிடைக்கும், எனவே நீங்கள் கூப்பன் பொத்தானைத் தேர்ந்தெடுத்தல் ரூ.37,990 விலைக்கு இதை வாங்க முடியும். iQOO Z3 5G ரூ.500 தள்ளுபடி சலுகையுடன் கிடைக்கிறது. இது முதலில் இந்தியாவில் ரூ.19,990 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சாதனம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 768G 5ஜி செயலியைக் கொண்டுள்ளது. இது 55W சார்ஜருக்கான ஆதரவையும் கொண்டுள்ளது.

ஏசர் PKB810 பிரிடேட்டர் ஏத்தன் 500 RGB மெக்கானிக்கல் ப்ளூ சுவிட்ச் கேமிங் கீபோர்டுக்கு ரூ.924 தள்ளுபடி உள்ளது. இது இ-காமர்ஸ் தளத்தில் ரூ.12,005 விலையுடன் பட்டியலிடப்பட்டுள்ளது. HP Envy 15.6 இன்ச் FHD லேப்டாப்பில் அமேசான் ரூ.1,500 தள்ளுபடியை வழங்குகிறது. குறிப்பிடப்பட்ட மாடல் 10 வது ஜென் கோர் i5 செயலி மற்றும் NVIDIA GeForce GTX 1650 Ti கிராபிக்ஸ் கார்டு உடன் வருகிறது.

எஸ்பிஐ கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி பணம் செலுத்தினால் வாடிக்கையாளர்கள் Mi 11X மீது பிளாட் ரூ.2,000 உடனடி தள்ளுபடியைப் பெறலாம். இந்த சாதனம் தற்போது ரூ.29,999 க்கு விற்கப்படுகிறது. ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸிலும் வங்கி சலுகை உள்ளது. எஸ்பிஐ கிரெடிட் கார்டில் 10 சதவீத உடனடி தள்ளுபடி கிடைக்கும்.

ஒன்பிளஸ் 9 5ஜி போன் அதே பழைய விலையில் கிடைக்கும், ஆனால் நீங்கள் SBI வங்கி கார்டுகளுடன் ரூ.3,000 தள்ளுபடி கிடைக்கும். தற்போது அமேசானில் ரூ.14,999 விலையில் சாம்சங் கேலக்ஸி M32 கிடைக்கும். அதோடு 1,250 ரூபாய் தள்ளுபடியும் இந்த போனுக்கு கிடைக்கும். இது ஐசிஐசிஐ வங்கி அட்டைகளில் செல்லுபடியாகும்.

இரண்டாம் தலைமுறை ஆப்பிள் ஏர்போட்ஸ் அமேசானில் ரூ.12,490 விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. வயர்லெஸ் இயர்போன்ஸ் 24 மணிநேர மியூசிக் பிளேபேக் நேரத்தை வழங்குகின்றன மற்றும் சிறி குரல் உதவியை ஆதரிக்கின்றன. ஆடியோ தரத்தை மேம்படுத்த இயர்போன்ஸ் M1 சிப்பைக் கொண்டுள்ளன.

Views: - 155

0

0