விவசாய துறையை மேம்படுத்தும் முயற்சியாக அமேசான் “Kisan Store” அறிமுகம் | முழு விவரங்கள் இங்கே

Author: Dhivagar
3 September 2021, 1:30 pm
Amazon Kisan Store goes live
Quick Share

அமேசான் இந்தியா நிறுவனம் விவசாயிகளுக்காக பிரத்யேகமாக கிசான் ஸ்டோர் என்று அழைக்கப்படும் ஒரு கடையைத் துவங்கியுள்ளது. விவசாயிகள் இந்த தளத்தில் விவசாயக் கருவிகள், விதைகள், பயிர் பாதுகாப்பு மருந்துகள் உட்பட 8000 க்கும் மேற்பட்ட வேளாண் இடுபொருட்களை வாங்க முடியும். 

விவசாயத் துறையை மேம்படுத்துவதற்காக இந்திய அரசாங்கத்துடன் இணைந்து கிசான் ஸ்டோர் தொடங்கப்பட்டுள்ளது. மாண்புமிகு விவசாய மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் இந்த புதிய முயற்சியை துவங்கி வைத்தார். 

இந்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட ஐந்து இந்திய மொழிகளில் தங்களுக்கு ஏற்ற ஒன்றைப் பயன்படுத்தி விவசாயிகள் ஷாப்பிங் செய்ய முடியும்.

கிசான் ஸ்டோர் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு போட்டி விலையில் விவசாயக் கருவிகளை வாங்குவதை எளிதாக்கும். 

விவசாயிகள் நாடு முழுவதும் உள்ள 50,000 க்கும் மேற்பட்ட அமேசான் ஈஸி ஸ்டோர்களுக்கும் சென்று தங்களுக்கு தேவையான விவசாய உபகரணங்களைப் பெற முடியும். 

விவசாயிகள் 20+ க்கும் மேற்பட்ட பிராண்டுகளில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயப் பொருட்களைத் தேர்ந்தெடுத்து வாங்கலாம். இதில் நாடு முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான சிறு மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்களும் உள்ளன. விவசாயிகள் நெட் பேங்கிங், UPI, அமேசான் பே மற்றும் டெபிட் & கிரெடிட் கார்டுகள் போன்ற பிற டிஜிட்டல் தளங்களில் அல்லது கேஷ் ஆன் டெலிவரியைத் தேர்வு செய்து பணம் செலுத்தலாம்.

Views: - 423

0

0