Amazon |மாணவருக்கு ரூ.45,000 இழப்பீடு: அமேசான் மீது அதிரடி நடவடிக்கை எடுத்த நுகர்வோர் ஆணையம்
27 January 2021, 10:06 amஸ்மார்ட்போன் ஆதிக்கத்தின் காரணமாக ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பழக்கம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. மளிகை சாமான்கள் முதல் மருந்து, உணவு, உடை, கேஜெட்டுகள் வரை அனைத்தும் ஆன்லைனிலேயே கிடைக்கின்றன. அதுவும், இந்த கொரோனா காரணமாக என்னென்ன நிறுவனங்கள் வளரவில்லையோ தெரியவில்லை. ஆன்லைன் வணிகம் மட்டும் எக்கச்சக்கமாக வளர்ந்துப் போனது.
இந்நிலையில், அமேசானுக்கு எதிரான மோசடி வழக்கில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு நுகர்வோர் ஒருவருக்கு இழப்பீடு வழங்க அமேசான் நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரிசாவைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவரான சுப்ரியா ரஞ்சன் கடந்த 2014 ஆண்டின் அமேசானில் ஒரு சலுகையைப் பார்த்துள்ளார்.
அந்த சலுகையின்படி, அமேசான் ரூ.190 க்கு மடிக்கணினியை வழங்குவதாக அறிவித்திருந்தது. இதைக் கண்டு ஆச்சரியப்பட்ட ரஞ்சன் மடிக்கணினியை ஆர்டர் செய்துள்ளார். அவர் படிப்புக்கு மடிக்கணினி தேவை என்பதால் அதை உடனே ஆர்டர் செய்துள்ளார். ஆர்டரும் ஏற்கபட்டது
சில நிமிடங்களில் அமேசானிடம் இருந்து ரஞ்சனுக்கு ஒரு மின்னஞ்சல் வந்துள்ளது, அதில் அவர் ரூ.190 க்கு ஆர்டர் செய்த மடிக்கணினிக்கான ஆர்டர் ரத்துச் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து ரஞ்சன் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு விசாரித்தார். தொழில்நுட்ப குறைபாடு காரணமாக மடிக்கணினி ஆர்டர் ரத்து செய்யப்பட்டது என்று விளக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, ரஞ்சன் மீண்டும் மற்றொரு மடிக்கணினியை ஆர்டர் செய்தார், ஆனால் அதுவும் ரத்துச் செய்யப்பட்டது. சரியான நேரத்தில் லேப்டாப் கிடைக்காததால் தனது கல்லூரியில் கொடுத்த அசைன்மென்டை உரிய நேரத்தில் அவரால் சமர்ப்பிக்க முடியவில்லை. இதனால் மன உளைச்சலுக்குள்ளான ரஞ்சன் நுகர்வோர் ஆணையத்தை அணுகியுள்ளார்.
இந்த வழக்கைக் கிட்டத்தட்ட 6 வருடங்கள் விசாரித்த பிறகு நிதி மோசடி மற்றும் உளவியல் துன்புறுத்தல் ஆகியவற்றுக்காக அந்த மாணவருக்கு 45000 ரூபாய் இழப்பீடு வழங்குமாறு நுகர்வோர் ஆணையம் அமேசானுக்கு உத்தரவிட்டது.
0
0