3D பிரின்டிங் மூலம் ஸ்னார்கெல்லிங் மாஸ்கை வென்டிலேட்டராக மாற்றி அசத்திய இத்தாலி நபர்!!!

25 March 2020, 4:55 pm
Quick Share

3D பிரின்டிங் வந்த பிறகு தான் பொருட்களை இந்த அளவிற்கு மாற்ற முடியும் என்பதே தெரிய வந்தது. இந்த தொழில்நுட்பம் தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து நம்மை காத்துக் கொள்ளவும் உதவி புரிகிறது. எப்படி என யோசிக்கிறீர்களா??? இப்படி தான்…தண்ணீருக்கு அடியில் நீந்த பயன்படுத்தும் ஸ்னார்கெல்லிங் மாஸ்கை வென்டிலேட்டராக மாற்றி உள்ளது.

இஸினௌவா என்ற இத்தாலியை சேர்ந்த உள்ளூர் 3D பிரின்டிங் தொழிலாலர் தற்போது உள்ள வென்டிலேட்டர் பற்றாக்குறையை சமாளிக்க இந்த புதிய யுக்தியை கையாண்டுள்ளார். 3D பிரின்டர் அடாப்டரின் மூலமாக ஸ்னார்கெல்லிங் மாஸ்கை C-PAP மாஸ்காக  மாற்றி ஆக்ஸிஜன் தெரபி வழங்க வசதி செய்து உள்ளது.

C-PAP மாஸ்கை பற்றி தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள். கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்ட நபர்களுக்கு C-PAP மாஸ்கை தான் தற்போது பயன்படுத்தி வருகின்றனர். இத்தாலியில் உள்ள கார்டோன் வால்ட்ரம்பியா என்ற மருத்துவமனையை சேர்ந்த டாக்டர். ரினட்டோ ஃபவேரோ என்பவரின் மனதில் தான் முதன் முதலாக இந்த யோசனை தோன்றியது.

பிறகு ஃபவேரோ இஸினௌவாவை தொடர்பு கொண்டு தனது யோசனையை கூறி இதனை விரைவாக அமல்படுத்துவதற்கான வேலைகளை செய்ய சொன்னார். அந்நிறுவனம் உடனடியாக ஸ்னார்கெல்லிங் மாஸ்க் தயாரிக்கும் நிறுவனமான ‘டெக்கத்லான்’ யை சந்தித்து பேசினார். இஸினௌவாவிற்கு ஒத்துழைக்க அவர்கள் உடனே சம்மதம் தெரிவித்து விட்டனர்.

பதிவில் கூறப்பட்டுள்ளதாவது, “டாக்டர். ரினட்டோ ஃபவேரோ ஸ்னார்கெல்லிங் மாஸ்கில் இருந்து தீவிர சிகிச்சை பெற்று வரும் கொரோனா பாதிப்பாளர்களுக்கு பயன்படுத்தப்படும் C-PAP மாஸ்கை தயாரிக்கும் யோசனையை பகிர்ந்தார். மார்க்கெட்டில் ஏற்கனவே இருக்கும் ஸ்னார்கெல்லிங் மாஸ்கில் சிறு மாற்றங்கள் செய்து C-PAP மாஸ்கை தயாரிக்கும் முறை தான் அது.”

மேலும் அந்த நிறுவனம் ஸ்னார்கெல்லிங் மாஸ்கில் இருந்து வென்டிலேட்டர்களை எவ்வாறு செய்வது என்ற வீடியோவையும் வெளியிட்டுள்ளது. அதனை செய்ய முதலில் உங்களுக்கு 3D அடாப்டர்கள் தேவைப்படும். இஸினௌவா அதனை செய்வதற்கான வீடியோவையும் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். 

இந்த மாஸ்க் தற்போது வெற்றியடைந்து இருந்தாலும்  பெரிய அளவிளான இதன் தயாரிப்பு இன்னும் தொடங்கவில்லை. ஏனெனில் இந்த மாஸ்க் இன்னும் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தலாம் என்ற அறிவிப்பை பெறவில்லை. இதனை பயன்படுத்தும் நோயாளிகள் ஒரு டிக்லரேஷனில் கையெழுத்திட்ட பிறகே அந்நிறுவனம் அதனை பயன்படுத்த அனுமதிக்கிறது.

Leave a Reply