சிங்கத்தின் தோரணையில் புதிய மெட்ரோபோலிஸ் ஸ்கூட்டர்! ஆனந்த் மஹிந்திரா வீடியோ பகிர்வு!

9 September 2020, 3:46 pm
Anand Mahindra tweets video of just-launched Peugeot Metropolis
Quick Share

மெட்ரோபோலிஸ் மேக்ஸி ஸ்கூட்டர் சமீபத்தில் பாரிஸில் பியூஜியோ மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது, ஆனந்த் மஹிந்திரா ட்விட்டரில் இந்த ஸ்கூட்டரின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். பியூஜியோ மோட்டார்சைக்கிள்ஸ் ஒரு மஹிந்திரா ரைஸ் நிறுவனம்  என்பது  குறிப்பிடத்தக்கது.

மெட்ரோபோலிஸ் மூன்று சக்கர மேக்ஸி ஸ்கூட்டர், திடகாத்திரமான தோற்றத்தைக் கொண்டுள்ளது மற்றும் நகர்ப்புற பயண விருப்பமாக இருக்க வேண்டும் என்ற லட்சியங்களைக் கொண்டுள்ளது. 339 சிசி நான்கு-ஸ்ட்ரோக், லிக்விட்-கூல்ட், சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் மூலம் இயக்கப்படும் இந்த ஸ்கூட்டர் 35 HP அதிகபட்ச சக்தியை வழங்குகிறது மற்றும் 38 Nm திருப்புவிசையை உருவாக்குகிறது. 12 அங்குல சக்கரங்களில் அமர்ந்திருக்கும் மெட்ரோபோலிஸ் சுமார் 256 கிலோ எடையுள்ளதாகவும், ABS ஒரு நிலையான பாதுகாப்பு அம்சமாகவும் உள்ளது.

உலகளாவிய சந்தைகளில் மூன்று சக்கர ஸ்கூட்டருக்கான இடம் சிறியது ஆனால் போட்டித்தன்மை வாய்ந்தது. பியூஜியோ மோட்டார்சைக்கிள்ஸ் இந்த பிரிவைச் சில காலமாக கவனித்து வருகின்றன, இப்போது யமஹா ட்ரைசிட்டி 300 போன்றவற்றுக்கு எதிராக மெட்ரோபோலிஸ் போட்டியிட வருகிறது. 

இந்த ஸ்கூட்டர் இந்தியாவிற்கும் கொண்டு வரப்படுமா என்பது இன்னும் தெரியவில்லை என்றாலும், ஆனந்த் மஹிந்திரா டீசர் வீடியோ பகிர்ந்துள்ளதால் வாய்ப்புகள் இருப்பதாக தோன்றுகிறது. 

மஹிந்திரா பியூஜியோ மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தில் பெரும் பங்கைக் கொண்டிருந்தது, ஆனால் அதை 2019 அக்டோபரில் முழுவதுமாக வாங்கியது. பிரான்சின் மாண்டூரில் அதன் உற்பத்தி வசதியுடன், பியூஜியோ மோட்டார்சைக்கிள்ஸ் இப்போது மஹிந்திரா ரைஸின் கீழ் அதன் தயாரிப்பு இலாகாவை விரிவுபடுத்தி வருகின்றது.

Views: - 11

0

0