விரைவில் கடைகளில் ஆப்பிள் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி! கொண்டாட்டத்தில் ஐபோன் ரசிகர்கள்
29 September 2020, 3:24 pmஇந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போன்களில் ஆப்பிள் ஐபோன் 12 ஒன்றாகும், இது விரைவில் அறிமுகமாகும் என்று வதந்தி தொடர்ந்து வெளியாகி வருகிறது. யூகங்கள் இருந்தபோதிலும், வெளியீட்டு தேதியில் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை. இருப்பினும், புதிய அறிக்கைகள் ஐபோன் 12 மாடல்கள் அக்டோபர் 5 ஆம் தேதி விநியோகஸ்தர்கள் கடைகளுக்கு வரும் என்ற தகவல் இப்போது வெளியாகியுள்ளது.
ஆப்பிள் ஐபோன் 12 ஏற்றுமதி
அக்டோபர் 13 ஆம் தேதி ஆப்பிள் ஒரு நிகழ்வை நடத்தவுள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன (இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை), அந்நிகழ்வில் புதிய ஐபோன் 12 தொடர் அறிமுகமாகும் என்றும் சொல்லப்படுகிறது. ஐபோன் 12 மாடல்களின் முதல் ஏற்றுமதி அக்டோபர் 5 ஆம் தேதி விநியோகஸ்தர்களுக்கு செல்லும் என்று டிப்ஸ்டர் ஜான் ப்ரோஸர் தெரிவித்துள்ளார். அவரது ட்வீட்டில் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி ஆகிய இரண்டு மாடல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
சமீபத்திய கசிவைப் பார்க்கும்போது, முந்தைய கசிவுகளுடன் இது ஒத்திசைகிறது, ஆப்பிள் அறிமுகமான உடனேயே சமீபத்திய ஐபோன் 12 இன் இரண்டு மாடல்களை மட்டுமே அனுப்பும் என்று குறிப்பிட்டது. மற்ற இரண்டு மாடல்களும் நவம்பரில் விநியோகத்தை தொடங்கும் என்றொரு அறிக்கை முன்பு பரிந்துரைத்தது. இப்போதும், அதே போல் நடைபெற இருப்பதாக தெரிகிறது.