30,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் இந்த ஆப்பிள் ஐபோன் வாங்கணுமா? செம்ம சான்ஸ்!

19 January 2021, 1:14 pm
Apple iPhone XR Now Available For Rs. 28,900 In India
Quick Share

நீங்கள் எப்போதாவது ஒரு நவீன வடிவமைப்பு மற்றும் ஃபேஸ் ID அமைப்பைக் கொண்ட ஒரு ஆப்பிள் ஐபோனை வாங்க நினைத்து, அதிக விலை காரணமாக வேண்டாமென்று  விட்டிருந்தால், இப்போது அப்படியொரு போனைக் குறைந்த வாங்க ஒரு செம்ம சான்ஸ். ஆப்பிள் ஐபோன் XR இப்போது இந்தியா முழுவதும் 28,900 ரூபாய் விலையில் வாங்க கிடைக்கிறது.

நீங்கள் இப்போது ஆப்பிள் ஐபோன் XR ஐ ஆப்பிள் பிரீமியம் ரீசெல்லர் இமேஜின் வழியாக வெறும் ரூ.28,900 க்கு வாங்க முடியும். இருப்பினும், இந்த சலுகையைப் பெற நீங்கள் சாதனத்தை ஆஃப்லைன் கடையிலிருந்து மட்டுமே வாங்க வேண்டும்.

ஐபோன் XR ஐ (128 ஜிபி சேமிப்பகத்துடன் கூடிய அடிப்படை மாடல்) இப்போது வெறும் ரூ.28,900 விலையில் வாங்குவது எளிது. உங்களிடம் வேண்டியது எல்லாம் HDFC வங்கி கார்டு (டெபிட் அல்லது கிரெடிட் கார்டு) மற்றும் குறைந்தபட்சம் ரூ. 5,000 எக்சேஞ்ச் மதிப்புள்ள உங்கள் பழைய ஸ்மார்ட்போன். அவ்வளவுதான்!

Apple iPhone XR Now Available For Rs. 28,900 In India

எச்.டி.எஃப்.சி கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்துபவர்கள் ஐபோன் XR வாங்கும் போது ரூ.7,000 கேஷ்பேக் பெறலாம். அதற்கு மேல், உங்கள் பழைய ஸ்மார்ட்போனை நீங்கள் பரிமாறிக்கொள்ள வேண்டும், இது குறைந்தபட்சம் ரூ.5,000 வரை விலைக்குறைப்பை வழங்கும். பின்னர், இமேஜின் ஸ்டோர் ரூ.3,000 மதிப்பிலான கூடுதல் பரிமாற்ற போனஸை வழங்கும், இதன் படி ஐபோன் XR ஐ ரூ.28,900 விலையில் பெற முடியும்.

இந்த சலுகை ஜனவரி 26 வரை செல்லுபடியாகும் மற்றும் நாடு முழுவதும் உள்ள அனைத்து இமேஜின் ஸ்டோர்களுக்கும் பொருந்தும். இப்போதைக்கு, உங்கள் பழைய ஸ்மார்ட்போனின் மதிப்பைத் தீர்மானிக்க எந்த வசதியும் இல்லை, ஏனெனில் அந்த மதிப்பைத் தீர்மானிக்க ஒருவர் நேரடியாக கடைக்குத் தான் செல்ல வேண்டும்.

Views: - 0

0

0