ரூ.3,190 விலையில் Apple Airtags இந்தியாவில் அறிமுகம் | ஆனா இது எதுக்குங்க?

21 April 2021, 2:57 pm
Apple launches tracking device AirTag
Quick Share

ஆப்பிள் நிறுவனம் 2021 ஆம் ஆண்டில் நடத்திய அதன் முதல் நிகழ்வில், AirTag எனும் ஒரு சாதனத்தையும் அறிமுகம் செய்துள்ளது. இது ஆப்பிளின் Find My App ஐ பயன்படுத்தி பொருட்களைக் கண்காணிக்கவும் கண்டுபிடிக்கவும் பயன்படுகிறது.

இந்த Airtag ஐ உங்களின் ஹேண்ட்பேக், சாவி, பர்ஸ், backpack அல்லது பிற பொருட்களுடன் நீங்கள் இணைக்க முடியும் என்று நிறுவனம் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு Airtag சாதனமும் சிறியதாகவும் எடைகுறைவாகவும் இருக்கும். இது அகற்றக்கூடிய கவர் உடன் வட்ட வடிவமைப்பில் வருகிறது, அவை எளிதாக அகற்றப்படலாம். வாங்கும் போது வாடிக்கையாளர்கள் Airtag இல்  எழுத்துக்கள் மற்றும் 31 ஈமோஜிகளுடன் தங்களுக்குப் பிடித்தவாறு தனிப்பயனாக்கிக் கொள்ள முடியும்.

இந்த AirTag ஒரு இன்பில்ட் ஸ்பீக்கரையும் கொண்டுள்ளது, இது பயனர்களுக்கு அதன் இருப்பிடத்தைக் கண்டறிய உதவியாக இருக்கும். இது IP67 மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. எனவே இது நீர் மற்றும் தூசி-எதிர்ப்பு திறனைக் கொண்டுள்ளது.

இந்த AirTag க்காக, ஆப்பிள் பாலியூரிதீன் லூப், மற்றும் லெதர் லூப் மற்றும் லெதர் கீ ரிங் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய ஆப்பிள் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட உபகரணங்களையும் ஆப்பிள் சேர்த்துள்ளது.

ஏர்பாட்ஸ் போலவே, AirTag ஐயும் தானாக இணைக்க ஐபோன் அருகில் கொண்டு சென்றாலே போதும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதைச் செய்தபின், பயனர்கள் பிடித்தவாறு ஒரு பெயரை AirTag க்கு வைத்துக்கொள்ள முடியும்.

ஐபோன் 11 மற்றும் ஐபோன் 12 சீரிஸ் பயனர்கள் AirTag இன் துல்லியமான இடங்களைக் கண்டறிய அனுமதிக்கும் அல்ட்ரா வைட்பேண்ட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி U1 சிப் உடன் இந்த சாதனம் பொருத்தப்பட்டுள்ளதாக ஆப்பிள் கூறுகிறது. 

“இந்த மேம்பட்ட தொழில்நுட்பம் குறிப்பிட்ட வரம்பில் இருக்கும்போது இழந்த AirTag கிற்கான தூரம் மற்றும் திசையை இன்னும் துல்லியமாக தீர்மானிக்க முடியும். ஒரு பயனர் நகரும்போது, ​​துல்லியமான கண்டுபிடிப்பு கேமரா, ARKit, முடுக்கமானி மற்றும் கைரோஸ்கோப் ஆகியவற்றிலிருந்து உள்ளீட்டை பெற்று, பின்னர் ஒலி, ஹாப்டிக்ஸ் மற்றும் காட்சி பின்னூட்டங்களின் கலவையைப் பயன்படுத்தி AirTag கிற்கு வழிகாட்டும்” என்று நிறுவனம் இதன் செயல்பாடு குறித்து விளக்கியுள்ளது.

ஒரு பயனர் தனது AirTag ஐ இழந்தால், அதை Lost Mode இல் வைக்கலாம், மேலும் அது மீண்டும் வரம்பில் இருக்கும்போது அல்லது கண்டுபிடிக்கப்பட்டால் Find My Network மூலம் அதை கண்டுபிடிக்க முடியும். 

தொலைந்துபோன AirTag ஐ யாரோ ஒருவர் கண்டுபிடித்தால், அவர்கள் அதை தங்கள் ஐபோன் அல்லது NFC திறன் கொண்ட சாதனத்துடன் பயன்படுத்தலாம். அது அவர்களின் சாதனத்தில் ஒரு வலைத்தள பக்கத்திற்கு அழைத்துச் செல்லும், அங்கு அந்த  Airtag இன் உரிமையாளரின் தொடர்பு தொலைபேசி எண் காண்பிக்கப்படும்.

ஆப்பிள் AirTag விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள்

ஆப்பிள் AirTag இன் விலை இந்தியாவில் 3,190 ரூபாய் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பல AirTag குகளை வாங்க ஆர்வமுள்ளவர்கள், 4 Airtag ஐ ரூ.10,900 விலையில் பெற முடியும். ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் ஏப்ரல் 30 முதல் Apple.com மற்றும் ஆப்பிள் அங்கீகரிக்கப்பட்ட மறுவிற்பனையாளர்கள் மூலம் AirTag ஐ வாங்க முடியும்.

Views: - 2215

0

0