ஆப்பிள் M2 சிப்செட் உற்பத்தி துவக்கம்! விரைவில் புதிய மேக்புக்கில் வெளியாக வாய்ப்பு!

27 April 2021, 5:10 pm
Apple M2 chipset go in mass production this month
Quick Share

ஆப்பிள் சமீபத்தில் தனது M1 சிலிக்கான் சிப்செட் உடன் ஐபாட் புரோ மாடல்களையும் வண்ணமயமான ஐமாக் டெஸ்க்டாப்களையும் அறிமுகம் செய்தது. 

இப்போது ஆப்பிள் நிறுவனம் இரண்டாவது தலைமுறை M1 சிப்செட்டில் வேலை செய்து வருகிறது. சமீபத்திய அறிக்கையின்படி, இந்த மாதத்தில் M2 சிப்செட்டுகளின் வெகுஜன உற்பத்தி துவங்கியது தெரியவந்துள்ளது. இந்த செயலிகள் தயார் ஆக மூன்று மாதங்கள் ஆகும் என்றும், ஜூலை மாத தொடக்கத்தில் ஆப்பிள் தனது புதிய மேக்புக் மடிக்கணினிகளை அறிமுகப்படுத்தும் போது இந்த விநியோகம் தொடங்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

ஆப்பிள் M2 சிலிக்கான் சிப்செட் TSMC நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது, இந்நிறுவனம் தான் M1 சிப்செட் தயாரிப்பையும் மேற்கொண்டது. அதே 5nm செயல்முறையைப் பயன்படுத்தி இது தயாரிக்கப்படலாம். கடந்த ஆண்டின் M1 உடன் ஒப்பிடும்போது M2 எவ்வளவு மேம்படுத்தப்படுத்தல்களை கொண்டிருக்கும் என்பது உறுதியாகத் தெரியவில்லை. இருப்பினும், குறிப்புகளைப் பொறுத்தவரையில் M1 இல் 8-கோர் CPU, 8-கோர் GPU, 16-கோர் நியூரல் என்ஜின் மற்றும் ஒருங்கிணைந்த நினைவக கட்டமைப்பு உள்ளது.

M1 சிப்செட்டை அறிமுகப்படுத்திய நேரத்தில், ஆப்பிள் நிறுவனம் இது 3.5x வேகமான கணினி செயல்திறன், 6x வேகமான கிராபிக்ஸ் செயல்திறன் மற்றும் 15x வேகமான இயந்திர கற்றல் திறனைக் கொண்டு இருப்பதாக கூறியது, அதே நேரத்தில் இன்டெல் சிப் உடன் இயங்கிய முந்தைய தலைமுறை மேக் டெஸ்க்டாப்பை விட பேட்டரிக்கு 2x நீண்ட இயக்க நேரம் கிடைக்கும்  என்றும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சில புதிய சாதனங்களுக்கு M2 ஐ அறிமுகப்படுத்தும் போது இந்த ஆண்டு M1 சிப்செட்டை மேலும் பல சாதனங்களுக்கு நிறுவனம் கொண்டு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதுள்ள அனைத்து இன்டெல் அடிப்படையிலான சாதனங்களையும் M-சீரிஸ் சிப்செட்களுடன் மாற்றுவதற்கான இரண்டு ஆண்டு பணியில் இருப்பதாக ஆப்பிள் ஏற்கனவே கூறியுள்ளது. 

Views: - 104

0

0

Leave a Reply