A12 பயோனிக் சிப் உடன் ஆப்பிள் டிவி 4K இந்தியாவில் அறிமுகம் | விலையுடன் விவரங்கள் இங்கே

21 April 2021, 2:26 pm
Apple TV 4K With A12 Bionic Chip Launched in India
Quick Share

ஆப்பிள் டிவி 4K இன் அடுத்த தலைமுறை பதிப்பை ஆப்பிள் நிறுவனம்  அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஆப்பிள் டிவி 4K டால்பி விஷனுடன் உயர் பிரேம் ரேட் HDR அம்சத்தை வழங்குகிறது. A12 பயோனிக் சிப் உடன் கிராபிக்ஸ் செயல்திறனிலும் குறிப்பிடத்தக்க மேம்படுத்தலைப் பெற்றுள்ளது. 

புதிய ஆப்பிள் டிவி 4K ரூ.18,900 விலையில், apple.com, ஆப்பிள் ஸ்டோர் ஆப் மற்றும் ஆப்பிள் ஸ்டோர்களில் இருந்து வாங்க கிடைக்கும். இது ஆப்பிள் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட மறுவிற்பனையாளர்கள் மூலமாகவும், ஏப்ரல் 30 முதல் pay TV வழங்குநர்கள் மூலமாகவும் கிடைக்கும். மே மாதத்தின் இரண்டாம் பாதியில் இருந்து அமெரிக்கா உட்பட 30 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பிராந்தியங்களிலும் இந்த சாதனம் கிடைக்கும்.

புதிய சிரி ரிமோட் ரூ.5,800 விலைக்கு தனியே கிடைக்கும், இது முந்தைய தலைமுறை ஆப்பிள் டிவி 4K மற்றும் ஆப்பிள் டிவி HD உடனும் இணக்கமானதாக இருக்கும். ஆப்பிள் பாட்காஸ்ட்களில் மில்லியன் கணக்கான இலவச நிகழ்ச்சிகளையும் பயனர்கள் அனுபவிக்க முடியும்.

ஆப்பிள் டிவி 4k அம்சங்கள்:

  • புளூடூத் 5.0 வயர்லெஸ் தொழில்நுட்பம்
  • IR டிரான்ஸ்மிட்டர்
  • சார்ஜ் செய்வதற்கான லைட்னிங் கனெக்டர்
  • இதிலிருக்கும் ரிச்சார்ஜபிள் பேட்டரி ஒரு முறை சார்ஜ் செய்தால் வழக்கமான தினசரி பயன்பாட்டுடன் பல மாத பேட்டரி ஆயுளை வழங்கும்.
  • கம்பியூட்டர் சிஸ்டம் அல்லது தனியே விற்கப்படும் பவர் அடாப்டர் உடன் யூ.எஸ்.பி வழியாக சார்ஜ் செய்ய முடியும்.
  • IR அல்லது CEC வழியாக உங்கள் டிவி அல்லது ரிசீவரை கட்டுப்படுத்த முடியும்.

Views: - 2143

0

0