விஞ்ஞானிகள் எச்சரிக்கை…பூமியைக் கடக்கும் பெரிய விண்கல்… என்ன ஆகுமோ…???

Author: Hemalatha Ramkumar
23 September 2021, 6:40 pm
Quick Share

அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை விட மூன்று மடங்கு பெரிய ஒரு விண்கல் இன்று (23/9/2021)பூமியைக் கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விண்கல்லின் விட்டம் 425 அடி முதல் 985 அடி வரை இருக்கும் என அளவிடப் பட்டுள்ளது. இது தற்போது பூமியின் வழியில் மணிக்கு ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது.

2021 NY1 என பெயரிடப்பட்ட இந்த விண்கல், பூமியை பாதுகாப்பாக கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த விண்கல் பூமியில் இருந்து 970,000 மைல்கள் (1,561,063 கிலோமீட்டர்) தூரத்தில் கடந்து செல்கிறது என நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் தங்கள் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது.

ஒலியின் வேகத்தை விட 27 மடங்கு வேகத்தில் பயணிக்கும் இந்த பொருள் சூரியனில் இருந்து 193 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.எனவே பூமிக்கு அருகில் உள்ள பொருள் என இது விஞ்ஞானிகளால் வகைப்படுத்த பட்டுள்ளது.

குறைந்தபட்சம் 10 ஆண்டுகளில் 2021 NY1 விண்கல் பூமிக்கு மிக நெருக்கமாக மீண்டும் வர வாய்ப்பு உள்ளது. பூமியின் அருகாமையில் அண்டத்திலிருந்து அதிக விண்கல் விருந்தினர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வாரம் சூரியன் பூமத்திய ரேகையில் நேரடியாக பிரகாசிக்கிறது. வடக்கு மற்றும் தெற்கு அரைக்கோளங்கள் சம அளவு சூரிய கதிர்களைப் பெறுகின்றன. எனவே நேற்று, 2021 RX9 என்று பெயரிடப்பட்ட ஒரு சிறுவிண்கல் கிட்டத்தட்ட கிசாவின் பிரமிடு அளவில்(128 அடி உயரம்) பூமியை கடந்து மணிக்கு 53,108 கிலோமீட்டர் வேகத்தில் (மணிக்கு33,000 மைல்கள்) கடந்து சென்றது.

வெள்ளிக்கிழமை, அதாவது செப்டம்பர் 24 அன்று, 2021 QV6 என அழைக்கப்படும் ஒரு சிறிய விண்கல் பூமியைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 525 அடி வரை அகலம் இருக்கும் என இது கணிக்கப்பட்டுள்ளது. மேலே குறிப்பிட்டுள்ள மற்ற அனைத்தையும் போல இந்த சிறுவிண்கல் பூமிக்கு அருகில் உள்ள பொருளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

நாசாவின் பூமிக்கு அருகில் உள்ள பொருள் ஆய்வு மையத்தின் (CNEOS) படி, இந்த பொருள்கள் எதுவும் பூமியில் உள்ள உயிர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. 1990 களின் பிற்பகுதியில் இருந்து இந்த குழு 25,000 NEO களை அடையாளம் கண்டுள்ளது. இந்த விண்கற்கள் எதுவும் வெறும் கண்களுக்கு தெரியாது. நீங்கள் அதைப் பார்க்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் தொலைநோக்கியைப் பயன்படுத்தி பார்க்கலாம்.

Views: - 327

0

0